8 ஜிபி ரேம் போன்
இப்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிதாக ஒரு விளம்பர யுக்தியைக் கடைபிடித்துவருகிறது. அதன்படி தனது தயாரிப்புகளை அறிமுகப் படுத்துவதற்கு முன்பு அது பற்றிய தகவல்களை இணையத்தில் கசியவிட்டு வாடிக்கையாளர்களி டையே ஏக்கத்தை உண்டாக்கு வதுதான் அந்த புதுயுக்தி. இப்படி கடந்த மாதம் முழுவதும் இணையத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்த ஒரு போன் 'ரெட்மி கே 30'. அதன் வடிவமும் ஸ்டைலும் 'இந்த போன் எப்ப கடைக்கு வரும்?' என்று வாடிக்கையாளர்களை ஏங்க வைத்துவிட்டது.
இந்நிலையில் 'ஷியோமி' நிறுவனம் 'கே 30'க்கு பிரமாண்ட அறிமுக விழாவை நடத்தி அசத்தியிருக்கிறது. இந்தியாவில் இந்த போன் எப் போது கிடைக்கும் என்ற தேதி அறிவிக்கப்படவில்லை. 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்கில் ஸ்நாப்டிராகன் 765 ஜி பிராசஸருடன் களமிறங்கியிருக்கிறது 'கே 30'.
ஃபிங்கர் பிரின்ட் வசதியுடன் 6.67 இன்ச்சில் மெலிதான எல்சிடி டிஸ்பிளே, சோனி ஐஎம் எக்ஸ் 686 சென்சாருடன் 64 எம்பியில் முதன்மையான கேமரா.
120 டிகிரி ஃபீல்டு ஆஃப் வியூவில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க 8 எம்பியில் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்பியில் டெப்த் டேட்டா பதிவுகளுக்கு ஒரு கேமரா, மைக்ரோ புகைப் படங்களுக்கு 5 எம்பியில் ஒரு கேமரா என நான்கு பின்புற கேமராக்கள், இதுபோக 20 எம்பியில் செல்ஃபி கேமரா வேறு. 6ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், 64 ஜிபி முதல் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ், 4500 mAh பேட்டரி திறன் என்று ஆர்வத்தைத் தூண்டுகிறது இந்த போன். விலை ரூ.16 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
8GB RAM phone
Now being adopted by smartphone companies. Accordingly, before launching its product, the information was leaked on the internet to create a longing for customers. One phone that has been circulating on the internet for the past month is 'Redmi K30'. Its format and style is 'When will this phone come in?' That has lured customers.
In this case, Shyomi has launched a massive launch for K-30. When the phone will be available in India. The 'K30' is a 4G and 5G network with Snapdragon 765G processor. 6.67 inch Slim LCD Display with Fingerprint, 64MP First Camera with Sony IMX 686 Sensor.
8MP Wide Angle Camera for Photo and Video at 120 Degree Field of View, 2MB for Deep Data Recording at 2MP, 5MB for Micro Smoke Photos Four rear cameras, such as 20MP B camera is different. The phone comes with 6GB and 8GB RAM, 64GB to 256GB storage, 4500mAh battery capacity. Prices start from Rs 16,000.

No comments:
Post a Comment
Please Comment