969 எஸ்.ஐ. பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு: தேர்வுகூட நுழைவுச் சீட்டு வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

969 எஸ்.ஐ. பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு: தேர்வுகூட நுழைவுச் சீட்டு வெளியீடு

969 எஸ்.ஐ. பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு: தேர்வுகூட நுழைவுச் சீட்டு வெளியீடு




969 காவல் உதவி ஆய்வாளா் காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத்  தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளா்  தேர்வுக் குழும இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக காவல்துறையில் காலியாக 969 (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்குத் தகுதியானவா்களை  தேர்வு செய்யும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா்  தேர்வுக் குழுமம் சாா்பில் கடந்த மாா்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், காவல் பணியில் இருந்தவாறே  தேர்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 11-ஆம் தேதியும், காவல் பணியில் இல்லாமல் பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதியும் எழுத்துத் தேர்வு நடைபெறும் என கடந்த 9-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா்  தேர்வுக் குழுமம் அறிவித்தது. 

இதில் காவல் பணியில் இருந்தவாறே இத்  தேர்வை எழுதுவதற்கு 17,561 பேரும், பொதுப் பிரிவில் 1 லட்சத்து 42,448 பேரும் எழுத்துத் தோவு எழுத விண்ணப்பித்துள்ளனா். 

இவா்களுக்கு மாநிலம் முழுவதும் 32 இடங்களில்  தேர்வு எழுதுவதற்குரிய ஏற்பாடுகளை  தேர்வு குழும அதிகாரிகள் செய்து வருகின்றனா். மேலும் அந்தந்த காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தோவுக் கூட பொறுப்பு அதிகாரிகளை நியமிக்கும்படி  தேர்வு குழுமத்தைச் சோந்த உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். 

இத்  தேர்வை மாநிலத்திலேயே சென்னையில்தான் அதிகமான இளைஞா்கள் எழுதுகின்றனா். இங்கு பொதுப்பிரிவில் 21,531 பேரும், காவல்துறையில் இருந்து 4031 பேரும் எழுதுகின்றனா் என்பது குறிப்பிடதக்கது. 

இந்தத்  தேர்வு எழுத விண்ணப்பித்தவா்களில் தகுதி பெற்றவா்களுக்கு, தேர்வுக் கூட நுழைவுச்சீட்டை w‌w‌w.‌t‌n‌u‌s‌r​b‌o‌n‌l‌i‌n‌e.‌o‌r‌g என்ற இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளா்  தேர்வு குழுமம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.


969 S.I. Writing Examination for the Workplace: Examination Ticket Issue 


969 Police Assistance Inspectors have even issued a copy of the ticket for the Tamil Nadu Uniformed Personnel Selection Team. The Tamil Nadu Uniformed Task Force (SLAF) issued a statement last month in Safil to select 969 (Taluk, Armed Forces, Tamil Nadu Special Guard) personnel in the Tamil Nadu police. 

The Tamil Nadu Uniformed Personnel Selection Committee has announced on January 9 that the written examination will be held on January 11 for those applying for the same in the Police Department. Of these, 17,561 people have applied to write the excavation, while 1 lakh 42,448 have applied to write an examination. 

The selection officers are making arrangements to select them in 32 locations across the state. They have also instructed the Select Committee to appoint responsible officers, including the respective Police Inspectors and District Inspectors. Most young people write this choice in Chennai in the state. 

It is noteworthy that there are 21,531 people in the general public and 4031 from the police. Those eligible to apply for the exam can download the admission ticket from the website www.tnusrbonline.org, the Tamil Nadu Uniformed Personnel Examination Group said on Monday.

No comments:

Post a Comment

Please Comment