பாரத ஸ்டேட் வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பாரத ஸ்டேட் வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது!

பாரத ஸ்டேட் வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது!



ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்திற்கேற்ப பாரத ஸ்டேட் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது குறைத்து வருகிறது. 

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தனது ரெப்போ விகிதம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே இருந்த 8.05 சதவிகிதத்தில் இருந்து 0.25% குறைத்து 7.8 சதவிகிதமாக அறிவித்துள்ளது. மேலும், இது ஜனவரி 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக்கடன் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான கடன்களின் வட்டி விகிதம் வருகிற ஜனவரி 1ம் தேதியில் இருந்து குறையும். இதனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Interest rates for loans at State Bank of India go down!

State Bank of India slashes repo rate by 0.25% The Reserve Bank has been reducing the repo interest rate for loans issued to banks in the short term. State Bank of India (SBI) today announced its repo rate. Accordingly, it has declined 0.25% from the existing 8.05% to 7.8%. 

It is also said that it will come into effect from 1st January. As a result, interest rates on home loans and small and small business loans at the State Bank of India will drop from January 1. This has made it a delight among State Bank customers.

No comments:

Post a Comment

Please Comment