நாளை முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்! ரிசர்வ் வங்கி அதிரடி!
ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த அதிரடி சேவையானது வரும் டிசம்பர் 16 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த அதிரடி முடிவானது சில்லறை பணம் செலுத்துதல் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கி முன்னரே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் சில்லறை செலுத்துதல் சிஸ்டம் மூலமாக தற்போது, பணி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். நெஃப்ட் சிஸ்டம் மூலமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம். முன்னதாக கடந்த ஜூன் மாதம் முதல், ஆர்.டி.ஜி.எஸ். எனப்படும் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (RTGS) மற்றும் நெஃப்ட் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய கட்டணம் கிடையாது என்று அறிவித்தது. இந்த நிலையில் இத்தகையதொரு சலுகையை வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து நாட்களும் ஆன்லைன் சேவை நாளை முதல் அமலுக்கு வரவிருக்கும் நெஃப்ட் மூலம் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆர்.டி.ஜி.எஸ், நெஃப்ட், ஐ.எம்.பி.எஸ் ஆகியவற்றின் மூலமாக ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மின்னணு முறையில் பணப்பரிமாற்ற செய்ய முடியும். விடுமுறை நாட்களிலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஆனால் வங்கி நேரங்களுக்கு மட்டுமே, இந்த சேவையை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.இந்நிலையில், நெஃப்ட் சேவையில் தற்போது இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த டிஜிட்டல் ஊக்குவிப்பு சேவையானது விடுமுறை நாட்கள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும் நெஃப்ட் சேவை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் கனவை நினைப்படுத்தும் விதமாக இந்த சேவை நீட்டிப்பானது டிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இனி விடுமுறை நாட்கள், வங்கி நேரம் முடிவு என இல்லாமல், நமக்கு ஏற்றாற்போல் விருப்பம் போல பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இது முழுக்க முழுக்க மக்கள் இணைய சேவையை பயன்படுத்தும் விதமாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
You can also make cash transactions from tomorrow to holidays!
Reserve Bank Action! The central government has taken several measures to promote online money laundering. In one phase, the Reserve Bank of India has approved 24-hour cash transactions through the National Electronic Fund Transfer (NEFT), known as NEFT. The action service is due to come into effect from December 16. The Reserve Bank had earlier announced that it was expecting a drastic change in the retail payment system.
Currently, through the Reserve Bank's Retail Payment System, cash transactions can be carried out on the NET from 8 am to 7 pm only on working days. Payment of up to Rs. 2 Lakhs through NetSystem. Earlier last June, the RDGS has been in the works. Real Time Settlement System (RTGS) and Netflix announced that there is no charge for cash transactions. It is noteworthy that such a concession has been made.
The Reserve Bank of India said the online cash service will be available 24 hours a day, 7 days a week, with all the online services coming into effect from tomorrow. Also, you can transfer funds from one account to another electronically through RTGS, NEFT and IMPS. You can also make transactions during the holidays. However, this service can only be used for banking hours.
The RBI has announced that this digital promotion service will be available on all days of the year, including holidays. The extension of service has been very popular among tickers, reminiscent of Prime Minister Modi's dream. No longer holidays, banking time, we can make cash transactions as we wish. It is also considered to be a full-fledged Internet service.

No comments:
Post a Comment
Please Comment