`உங்களால் பெருமைப்படுகிறேன்!' - ரஷ்ய அதிபரை அசரடித்த ஒடிசா பள்ளி மாணவர்
ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரவித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்புப் படித்துவருபவர் பிஸ்வந்த் பத்ரா. இவர், ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நிதி ஆயோக் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து 25 மாணவர்களை நிதி ஆயோக் அமைப்பு இதற்காகத் தேர்வு செய்திருந்தது.கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை நடைபெற்ற இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு மாணவர் பிஸ்வந்த் பத்ரா தனது கண்டுபிடிப்பைக் காட்சிப்படுத்தினார்.
தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கும் தண்ணீர் வழங்கும் `ஸ்மார்ட் வாட்டர் டிஸ்பென்சர்' ஒன்றை வடிவமைத்திருந்தார் இவர். இந்தக் கண்காட்சியை நேரில் பார்வையிட்ட ரஷ்ய அதிபர் புடின், மாணவர் பிஸ்வந்திடம், அவரது கண்டுபிடிப்பு குறித்து கேட்டறிந்திருக்கிறார். இந்தத் துறையில் மாணவருக்கு இருக்கும் அறிவு புடினை வியப்புள்ளாக்கியதாக அவரது மொழிபெயர்ப்பாளர் தெரிவித்தார்.
மேலும், ``உங்களைப் போன்ற இன்னும் நிறைய சிறுவர்கள் இங்குவந்து, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும். அது பெருமையளிக்கக் கூடியது'' என்று புடின் கூறியதாகவும் அவரது மொழிபெயர்ப்பாளர் தெரிவித்தார். ரஷ்ய அதிபரிடம் பாராட்டு பெற்ற சிறுவனை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் வாழ்த்தினார்.
I'm proud of you! ' - Odisha School Student
Behind Russian Chancellor Bishwant Bhadra, a 9th grader at Kendravidyalaya School in Berhampur, Odisha. He was selected on behalf of Financial Aoyog to attend an educational event in Sochi, Russia. Financial AoC has selected 25 students from different parts of the country to participate in the exhibition. He designed a Smart Water Dispenser that provides water to fight water shortages.
Visiting the exhibition, Russian President Putin has asked student Biswant about his discovery. His translator said Putin was impressed by the student's knowledge of the field. “More and more boys like you should come here and attend such events. Putin said it was a proud moment. ” Odisha Chief Minister Naveen Patnaik also congratulated the boy who was praised by the Russian President.

No comments:
Post a Comment
Please Comment