சிறந்த சலுகைகள் தரும் எஸ்பிஐ - இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே
state bank online banking: வங்கி சேவையில் மிகச் சிறந்த சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்பிஐ வங்கியின் டாப் சலுகைகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
எஸ்பிஐ சேமிப்புக் கணக்கில் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி குறைந்தபட்சம் 5000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகக் குறைகிறது.
இந்த மினிமம் பேலன்ஸ் அளவு 50 சதவீதம் (ரூ.1,500) வரை குறைந்தால் 10 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதமாகக் கழிக்கப்படும். 75 சதவீதம் வரை குறைந்தால் 15 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதம் வசூலிக்கப்படும்.
'அத்தியாவசியம் முதல் ஆடம்பரம் வரை' - 2019-ம் ஆண்டை எகிற வைத்த விலைவாசி உயர்வு!
இந்த அபராதத் தொகை தற்போது 30 ரூபாய் 50 ரூபாய் வரை (ஜிஎஸ்டி தனி) இருக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை சிறிய நகரங்களில் 2,000 ரூபாயாகவும் கிராமங்களில் 1000 ரூபாயாகவும் இருக்கும்.
சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 3 மூறை மட்டும் கட்டணம் இல்லாமல் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.
அதற்கு மேல் ஒரு டெபாசிட்டுக்கு 50 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) கட்டணம் செலுத்த வேண்டும். கணக்கு தொடங்கிய வங்கிக் கிளையைத் தவிர வேறு கிளைகளில், ஒரு நாளில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை மட்டும் டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் டெபாசிட் தொகையை ஏற்பது பற்றி அந்த கிளையின் மேலாளர் முடிவு செய்வார்.
கட்டணம் ரத்து - எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்
25,000 ரூபாய் வரை மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்ட சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் மாதம் 5 முறை (பண எடுப்பது மட்டுமின்றி இதர பயன்பாடுகளும் சேர்த்து) கட்டணம் இல்லாமல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்.
25 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்டிருந்தால் எந்த கட்டுப்பாடும் இல்லை.
போதிய இருப்புத் தொகை இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தாலும் 20 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) கட்டணம் உண்டு. சாதாரண டெபிட் கார்டை இலவசமாகவே வழங்குகிறது.
ஆனால், கோல்டு டெபிட் கார்டு பெற 100 ரூபாயும் (ஜிஎஸ்டி தனி) பிளாட்டினம் டெபிட் கார்டு வாங்க 300 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) வழங்க வேண்டும்.
State Bank Online Banking: Find out about SBI Bank's
Top Offers, which are the best in the banking service. Monthly balance in SBI savings account decreases from an average minimum of Rs 5000 to Rs 3,000. If the minimum balance amount is up to 50% (Rs. 1,500), a fine of 10 rupees (GST) will be deducted.
Fines of up to 75% will be imposed on 15 rupees (GST separate). 'From Essential to Luxury' - High Cost of 2019! This fine is currently up to 30 rupees to 50 rupees (GST separate). The minimum balance will be Rs. 2,000 in small towns and Rs. 1000 in villages.
Savings account holders will be able to deposit cash at no more than 3 cover per month. You have to pay a fee of Rs 50 (GST separate) for a deposit. Deposits up to a maximum of Rs. 2 lakhs per day can be made in any branch other than the bank branch where the account is opened.
The manager of the branch will decide on the amount of the deposit. Payment Cancellation - Happy News for SBI Customers Savings account customers with a monthly balance of up to Rs.25000
There is no restriction if the monthly balance is over 25 thousand. Even if the ATM transaction fails without sufficient balance, there is a fee of Rs 20 (GST). Offers a normal debit card for free.
But to get a Gold Debit Card, you have to pay 100 rupees (GST separate) and a Platinum Debit Card for 300 rupees (GST).

No comments:
Post a Comment
Please Comment