ஏர்டெல்லுக்கு போட்டியாக புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் ஜியோ!
ஏர்டெல்லின் வைஃபை காலிங் வசதியைத் தொடர்ந்து புதிய திட்டத்தை ஜியோவும் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்க்க, தக்க வைக்க புதிய புதிய திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் போனைப் பயன்படுத்தும் வைஃபை காலிங் என்ற திட்டத்தை சமீபத்தில் ஏர்டெல் அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஜியோவும் இதுபோன்ற திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, அதை அதிகாரப்பூர்வமாக ஜியோவும் அறிவித்துள்ளது.ஏர்டெல் வைஃபை காலிங் போல, வாய்ஸ் ஓவர் வைஃபை என்ற சேவையை ஜியோ அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், மோசமான சூழ்நிலையில் சிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய இணைப்பின் மூலம், தங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும். விரைவில் அனைவரின் பயன்பாட்டுக்கும் இது வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. முழுமையாக வரும்போது இதற்கான டேட்டா பிளான், கட்டணங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
Jio has announced the launch of its new plan following Airtel's WiFi Calling feature.
Telecommunication companies are coming up with new programs to attract and retain customers. Recently, Airtel announced plans to use Wi-Fi calling in non-network locations. Following this, Jio was expected to announce a similar plan. Currently, it is officially announced by Jio.
Jio has announced the launch of Voice over Wifi service, similar to calling Airtel WiFi. Customers caught up in the worst-case scenario will be able to call on their contacts through this new connection. It is also said that it will soon be available for everyone's use. The data plan for this will be announced when fully paid.

No comments:
Post a Comment
Please Comment