எறும்பும் சிறுமியும்!
தட்டிலிருந்த இனிப்புகளை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.
அந்தச் சிறுமியின் அருகே எறும்பு ஒன்று ஊர்ந்து வந்தது.
அந்த எறும்பு சிறுமியைப் பார்த்து, ""சிறுமியே!.... உன் கையில் இருக்கின்ற இனிப்பைச் சிறிது தரையில் உதிர்த்துப் போடு! நான் அதை எனக்கு இரையாக எடுத்துச் செல்வேன்!'' என்றது.
""எறும்பே!.... இந்த இனிப்புகள் எனக்காக வாங்கப்பட்டவை!..... சுவை மிகுந்தவை!..... இதைத் தரையில் கொட்டி வீணாக்க வேண்டுமா?.... அது என்னால் முடியாது!..... போ இங்கிருந்து!'' என்றாள் சிறுமி. ""சிறுமியே எதற்காக இப்படிக் கோபப்படுகிறாய்?.... நான் சொல்வதைக் கேள்!.... நீ வைத்திருக்கும் இனிப்பைப் பிட்டு, உதிர்த்துக் கொஞ்சம் தரையில் போடு!..... நான் அதை எடுத்துச் செல்வேன்!'' என்றது எறும்பு
""எறும்பே, நான் உனக்கு என் இனிப்பைத் தரமாட்டேன்!.... மரியாதையாக இந்த இடத்தை விட்டுப் போய்விடு!.... இல்லையென்றால் நான் என் கால் பெருவிரலால் உன்னை நசுக்கி விடுவேன்!.... போ!....'' என்றாள் சிறுமி.
""சிறுமியே, உனக்கு இனிப்பு என்றால் கொள்ளை ஆசை போலிருக்கிறது!.... என் மீது ஏன் கோபப்படுகிறாய்?.... கேவலம் இந்த இனிப்புக்கா என்னிடம் சண்டை போடுகிறாய்?.....என்னோடு வா!....
நான் வசிக்கும் புற்றில் மழைக்காலத்துக்காக ஏராளமான இனிப்புகளைச் சேமித்து வைத்திருக்கிறேன்!..... அவைகளை எல்லாம் நான் உனக்கே உண்ணக் கொடுக்கிறேன்!.... வருகிறாயா....'' என்று அன்பு ஒழுகக் கேட்டது எறும்பு.
எறும்பு இப்படிக் கூறும் என்று அந்தச் சிறுமி எதிர்பார்க்கவில்லை. எறும்புக்கு அவள் மீது இருந்த அன்பை சிறுமி உணர்ந்து கொண்டாள்!
அவளுக்கு வெட்கமாகிவிட்டது!.... தலை குனிந்தபடி நின்றாள்.
"இந்தச் சின்னஞ்சிறிய எறும்பே எனக்கு இனிப்பு தருகிறேன் என்கிறதே!.... இந்தச் சின்னஞ்சிறிய எறும்புக்கு இருக்கும் ஈகைக் குணம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே!.... அது கேட்டதோ சிறிய அளவுதான்!.... என்று கரிசனத்துடன் தான் வைத்திருந்த இனிப்பை அப்படியே எறும்புக்கு வைத்து விட்டாள் சிறுமி!....''
""எனக்கு இந்த இனிப்பு ரொம்ப அதிகம்!.... நான் இதைப் புற்றுக்குள் எடுத்துச் செல்லவும் முடியாது!.... சிறிது உதிர்த்துப் போட்டால் போதும்.... என் நண்பர்களை அழைத்து வருகிறேன்!.... '' என்று சென்றது எறும்பு.
சிறுமி இனிப்புகளை உதிர்த்துப் போட்டாள்.
அந்த இனிப்புப் பொடிகளை எறும்பு தன் நண்பர்களுடன் ஒற்றுமையாக எடுத்துச் செல்வதையும் பார்த்து ரசித்தாள்!
Ant and little girl!
A little girl was taking all the sweets from the plate. An ant was crawling beside the little girl. The ant looked at the little girl. I'll take it to me! '' "" Errrrrr .... these sweets were bought for me! ..... taste great! ..... Want to waste it on the floor? .... I can't! ..... Go from here! " Little girl "" Why are you so angry, little girl? Listen to me!
Take away the sweetness you have and throw it on the ground! I will take it! " "" Er, I will not give you my dessert! .... leave this place respectfully! Otherwise, I will crush you with my toes! .... Go! .... '' said the little girl. "" Little girl, if you're sweet, it's like a predatory desire .... Why are you angry at me? I am feeding them all! You are coming ....
' The little girl did not expect the ant to say so. The little girl senses her love for the ant! She was ashamed! "The little ant is sweet to me! This is the little ant we have lost!" "" "" "I have so much sweetness! I can't even take it! Just enough .... I am bringing my friends!

No comments:
Post a Comment
Please Comment