'ஸ்மார்ட் வாட்டர் டிஸ்பென்சர்' கண்டுபிடித்து ரஷ்ய அதிபரை வியக்க வைத்த மாணவர்!
பருவநிலை மாற்றம், நீராதாரங்கள் குறைந்து போவது ஆகிய பிரச்சனைகள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் தண்ணீரை சேமிக்க உதவும் வகையில் இளம் மாணவர் ஒருவர் புதுமையான ஸ்மார்ட் வாட்டர் டிஸ்பென்சரைக் கண்டுபிடித்துள்ளார்.
ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் பி.பிஸ்வந்த் பத்ரா. ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நித்தி ஆயோக் சார்பாக இவர் தேர்வு செய்யப்படதாக என்டிடிவி தெரிவிக்கிறது.
SIRIUS கல்வி மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து 25 மாணவர்கள் உட்பட 50 பேர் பங்கேற்றனர்.
’ஸ்மார்ட் வாட்டர் டிஸ்பென்சர்’ நீரோட்டத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய இயந்திரநுட்பம் ஆகும்.
இது வாட்டர் மீட்டருக்கு சிறந்த மாற்றாக செயல்பட்டு தண்ணீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த உதவும். இதனால் தண்ணீர் சமமாக விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்படும். இதன் முன்வடிவத்தின் விலை 2,000 ரூபாய் மட்டுமே.
எளிதாகக் கிடைக்கக்கூடிய மைக்ரோப்ராசசர், சொலினாய்ட் வால்வ், ஃப்ளோ சென்சார் ஆகியவையே இதற்கான முக்கியப் பாகங்கள் என ’தி இந்து’ குறிப்பிடுகிறது.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் இந்த நிகழ்ச்சியின் வீடியோவைப் பதிவை பகிர்ந்துகொண்டார்.
டிவிட்டரில் 2,000க்கும் அதிகமான விருப்பக் குறியீடுகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவில் பிஸ்வந்த் மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் தனது கண்டுபிடிப்பை விவரிக்கிறார். முதலமைச்சர் டிவிட்டரில் குறிப்பிடும்போது,
“பெர்ஹாம்பூர் பகுதியில் 9ம் வகுப்பு மாணவரான பி பிஸ்வாந்த் பத்ராவிற்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர் ரஷ்யாவின் சோச்சியில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது புதுமையான வாட்டர் டிஸ்பென்சரை அறிமுகப்படுத்தினார்.
தண்ணீர் பிரச்சனைக்கான இவரது புதுமையான தீர்வினை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார். வாழ்த்துக்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த இளம் கண்டுபிடிப்பாளர் ’ஒடிசா டிவி’ உடனான உரையாடலில் கூறும்போது,
“இந்தியா அணு ஆற்றல் தொடர்பாக ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவதற்கு ரஷ்ய அதிபர் ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
அணு ஆற்றல் பிரிவில் என்னைப் போன்ற மாணவர்கள் ஆர்வம் காட்டுவதைக் கண்டு இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் உறவு தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்று புடின் குறிப்பிட்டார்,” என தெரிவித்தார்.
ஐடி டேட்டா & அனாலிடிக்ஸ், க்ளீன் எனர்ஜி, பயோடெக், மருந்து, ரிமோட் எர்த் சென்சிங், ட்ரோன் மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற பல்வேறு பிரிவுகளின்கீழ் உள்ள புதிய கண்டுபிடிப்பு நடைமுறைகள் குறித்து பங்கேற்பாளர்கள் கலந்துரையாடினர் என என்டிடிவி குறிப்பிடுகிறது.
Student surprised by Russian President with 'smart water dispenser
'A young student has invented an innovative Smart Water Dispenser to help save water in today's rising climate problems and the dwindling supply of water. Piswant Badra is a ninth grade student from the Berhampur area of Odisha. NTTV reports that he has been selected on behalf of Niti Aayog to attend an educational event in Sochi, Russia.
The event, organized by the SIRIUS Education Center, was held from November 28 to December 8. 50 participants including 25 students from India participated in the event. Digital smart water dispenser is a technology to control the flow of the telephone. This can serve as a great alternative to a water meter and help control water supply.
This will ensure that the water is evenly distributed. The model is only Rs 2,000. The Hindu states that the most important parts are the microprocessor, the solenoid valve, and the flow sensor. Odisha Chief Minister Naveen Patnaik shared the video of the event. Twitter has received more than 2,000 optional codes.
In this video, Biswant narrates his invention with the help of a translator. The Chief Minister said on Twitter: “I congratulate B Biswant Bhadra, a class 9 student in Berhampur. He participated in an education program in Sochi, Russia and introduced his innovative water dispenser.
Russian President Vladimir Putin has praised his innovative solution to the water problem. Congratulations, ”he said. In a conversation with the young inventor of Odyssey TV, he said, “The Russian President is cooperating with India on nuclear energy. Meeting him is a pleasure.
Putin noted that the relationship between the two countries should continue to be strengthened by the interest of students like me in the field of nuclear energy. ” NTTV notes that the participants discussed new innovation practices under various categories such as IT Data & Analytics, Clean Energy, Biotech, Pharmaceutical, Remote Earth Sensing, Drone and Robotics.

No comments:
Post a Comment
Please Comment