ஐஐடி அல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையோடு கூடிய ஃபெல்லோஷிப்: சென்னை ஐஐடி அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஐஐடி அல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையோடு கூடிய ஃபெல்லோஷிப்: சென்னை ஐஐடி அறிவிப்பு

ஐஐடி அல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையோடு கூடிய ஃபெல்லோஷிப்: சென்னை ஐஐடி அறிவிப்பு



ஐஐடி அல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையோடு கூடிய ஃபெல்லோஷிப் குறித்து சென்னை ஐஐடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐஐடி அல்லாத மாணவர்களிடையே ஐஐடியின் அனுபவத்தை உணர வைக்கவும் ஆராய்ச்சி ஆர்வத்தை அதிகப்படுத்தவும் 'கோடைகால ஃபெல்லோஷிப் 2020' என்ற பயிற்சியை சென்னை ஐஐடி வழங்கி வருகிறது. 

இதற்கு ஐஐடி அல்லாத கல்லூரி மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 29,2020 ஆகும். இந்த ஃபெல்லோஷிப்பில் இரண்டு மாதம் பயிற்சி வழங்கப்படும். இதற்கு உதவித்தொகையாக ரூ.6,000 வழங்கப்பட உள்ளது. 

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஐஐடியில் 2020-ம் ஆண்டு மே 20 முதல் ஜூலை 19 வரை பயிற்சி வழங்கப்படும். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கோடைக்கால குறு-செயல்திட்டத்தைக் கற்றறிய (mini-project) பொறியியல், மேலாண்மை, அறிவியல் மற்றும் மானுடவியல் படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, 

* 3-ம் ஆண்டு பி.இ./ பி.டெக்./ பி.எஸ்சி. (பொறியியல்) மாணவர்கள் 

* ஒருங்கிணைந்த எம்.இ./ எம்.டெக். 3 அல்லது 4-ம் ஆண்டு மாணவர்கள் 

* முதலாமாண்டு எம்.இ./ எம்.டெக்./ எம்.எஸ்சி./எம்.ஏ. மாணவர்கள் 

* எம்பிஏ மாணவர்கள் படிப்பில் உயர் மதிப்பெண்கள் பெற்றுள்ள மேற்குறிப்பிட்ட மாணவர்கள் இந்த ஃபெல்லோஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பிற ஐஐடிக்களில் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

மாணவர்கள் படிக்கும்போது, கலந்துகொண்ட கருத்தரங்குகள், மேற்கொண்ட செயல்திட்டங்கள், போட்டிகள், இன்ன பிற விருதுகளைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். எந்தெந்த பொறியியல் பிரிவுகள் விண்ணப்பிக்கலாம்? 

* விண்வெளி பொறியியல் 

* அப்ளைடு மெக்கானிக்ஸ் 

* உயிரி தொழில்நுட்ப பொறியியல் 

* வேதியியல் பொறியியல் 

* சிவில் இன்ஜினீயரிங் 

* கணினி அறிவியல் பொறியியல் 

* வடிவமைப்பு பொறியியல் 

* மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் 

* இயந்திரவியல் பொறியியல் 

* உலோகவியல் பொறியியல் எந்தெந்த அறிவியல் பிரிவுகள் விண்ணப்பிக்கலாம்? 

* இயற்பியல் 

* வேதியியல் 

* கணிதம் 

* மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் 

* மேலாண்மைப் படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்னால், மாணவர்கள் கல்லூரி நிறுவனங்களில் நற்சான்றிதழ் பெற்று, கடிதத்தை இணைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://sfp.iitm.ac.in/contactus


Scholarships for non-IIT students with scholarships: IIT Announcements, Chennai

Chennai IIT has announced a scholarship for non-IIT students. IIT Madras IIT is conducting the 'Summer Fellowship 2020' training program for non-IIT students to understand the experience of IIT and to enhance their research interest. All non-IIT college students can apply. 

The deadline to apply is February 29,2020. This fellowship will offer two months of training. A sum of Rs. The selected students will be provided with training at IIT 20 to 20 July 1920. 

Who can apply? Students can apply for a mini-project learning engineering, management, science and anthropology over the summer. Specifically, the 

* 3-year BE / B.Tech / B.Sc. (Engineering) Students 

* Integrated ME / M.Tech. 3rd or 4th year students 

* Bachelor's M.E./M.Tech/ M.Sc./M.A. Students 

* The above mentioned students who have obtained higher marks in MBA students can apply for this fellowship. Students studying in other IITs cannot apply. Students should apply for the seminars, projects, competitions and other awards they have attended. What Engineering Divisions Can Apply? 

* Aerospace Engineering 

* Applied Mechanics 

* Biotechnology Engineering 

* Chemical Engineering

* Civil Engineering 

* Computer Engineering 

* Design Engineering 

* Electronics and Electronics Engineering 

* Mechanical Engineering 

* Metallurgy Engineering What science disciplines can apply? 

* Physics 

* Chemistry 

* Mathematics 

* Anthropology & Social Sciences 

* Management Courses Before applying, students must obtain a letter of credentials from college institutions and attach the letter.


No comments:

Post a Comment

Please Comment