கண்களை துணியால் கட்டிக்கொண்டு மிதிவண்டி ஓட்டிய பள்ளி மாணவி மாவட்ட ஆட்சியர் பாராட்டு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கண்களை துணியால் கட்டிக்கொண்டு மிதிவண்டி ஓட்டிய பள்ளி மாணவி மாவட்ட ஆட்சியர் பாராட்டு

பெண்கள் சாதனை கண்காட்சி தொடக்க விழாவில் கண்களை துணியால் கட்டிக்கொண்டு மிதிவண்டி ஓட்டிய பள்ளி மாணவி தி.மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பாராட்டு 

 கண்களை துணியால் கட்டிக்கொண்டு மிதிவண்டி ஓட்டிய அரசு பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவியை ஆட்சியர் கந்தசாமி நேற்று பாராட்டினார். பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் சாதனை கண்காட்சி தொடக்க விழா திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. ஆட்சியர் கந்தசாமி கண்காட்சியை தொடங்கி வைத்தார். 

ஆட்சியருக்கு சாரண, சாரணிய மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். இந்த கண்காட்சியில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டு, கலை நிகழ்ச்சி, அறிவியல், தற்காப்புக் கலை உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளின் விருதுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதனை பார்வையிட்ட ஆட்சியர், மாணவிகளை பாராட்டினார். 

இதையடுத்து பரதநாட்டியம், பாடல், வீணை, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில், திருக்குறள், தலைவர்கள் பெயர், திருப்பாவை, ஸ்லோகம் போன்றவற்றை கூறி இரண்டரை வயது சிறுமி லக்ஷனா அசத்தினார். இதையடுத்து விழாவில் ஆட்சியர் கந்தசாமி பேசும்போது, “பெண்களின் சாதனைகளை வீட்டில் முடக்கி வைக்காமல் வெளிப்படுத்துவதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. படிப்பு மட்டும் சாதனை கிடையாது. தனித்திறமையும் சாதனைதான். அரசு நிர்வாகம், தனியார் துறை, அரசியல், உள்ளாட்சி நிர்வாகம் என அனைத்திலும் பெண்கள் வழி நடத்தும் நிலை உருவாகி உள்ளது. 

தடைகளை உடைத்தெறிந்து சாதிக்க வேண்டும். விடா முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்” என்றார். முன்னதாக, கண்களை துணியால் கட்டிக்கொண்டு மிதிவண்டி ஓட்டியும், படம் வரைந்தும், நிறங்களை கூறி அசத்திய 6-ம் வகுப்பு மாணவியின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளியின் மகள் சுருதி(12). அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இவர், கண்களை கருப்பு பட்டையால் கட்டிக்கொண்டு மிதிவண்டி ஓட்டுதல், படம் வரைதல், நிறங்களை கூறுதல், சதுரங்கம் விளையாடுதல், உருவங்களை அடையாளம் காண்பது, மற்றவரை பின்தொடர்ந்து செல்வது போன்ற திறன்களை வளர்த்துள்ளார். அவரை, ஆட்சியர் கந்தசாமி முகாம் அலுவலகத்துக்கு நேற்று வரவழைத்து பாராட்டினார். பின்னர், கண்களை துணியால் கட்டிக்கொண்டு, விழா அரங்கம் வரை (600 மீட்டர் தொலைவு) மிதிவண்டி ஓட்டிச் சென்றார். அவருடன் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் மிதிவண்டியில் சென்றனர். இதில், முதன்மைக் கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா, காவல் துணை கண்காணிப்பாளர் ஹேமா சித்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Collector Kandasamy yesterday praised the 6th stndard  student of the government school who rode a bicycle.

Inauguration of the Women's Achievement Exhibition, under the program of protecting girls and teaching girls, began yesterday at the wedding hall at Venkikal next to Thiruvannamalai. Collector Kandaswamy started the exhibition. Scout and scout students welcomed the ruler.

The exhibition features awards, trophies and certificates of school students who have won various competitions including sports, art, science and martial arts at the district, state and national level. The Collector, who visited it, commended the students. Thereafter, Bharatanatyam, Song, Veena and Thirukkural Deliveries were held. Two-and-a-half-year-old girl Lakshana said, "Thirukkural, leaders name, Tirupai, slokam".Speaking at the function, Collector Kandaswamy said, “The exhibition is being held to showcase the achievements of women at home. 

Study alone is no achievement. Uniqueness is achievement. Women are leading the way in all aspects of government, private sector, political and local administration. Obstacles need to be broken and achieved. If you try hard, you will win. ” Previously, the action of a class 6th grader, drawing colors, drawing bicycles and drawing pictures, attracted the attention of all. 

Aruni is the daughter of a textile weaver from Purati (12). He is studying in 6th grade in the Government school. He has built his eyes with a black bar, bicycle riding, drawing, coloring, playing chess, identifying figures and pursuing others. He was summoned to the Kandaswamy camp office yesterday. 

Then, with his eyes closed, he drove the bicycle up to the ceremony hall (600 meters away). Officers, including the collector, went on a bicycle.Chief Education Officer Nadarajan, District Education Officer Arulselvam, District Social Welfare Officer Christina and Deputy Superintendent of Police Hema Chitra were also present.

No comments:

Post a Comment

Please Comment