'மாணவர்கள் பைக்கில் வருவது தெரிந்தால் பள்ளி நிர்வாகம், பெற்றோர் மீது நடவடிக்கை': எஸ்.பி., எச்சரிக்கை
தர்மபுரி: ''பள்ளி மாணவர்களுக்கு பைக் வாங்கி கொடுத்தனுப்பும் பெற்றோர் மற்றும் அனுமதிக்கும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தர்மபுரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜன் எச்சரித்துள்ளார்.தர்மபுரியில், மாணவர்கள் சிலர், பைக்குகளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
அப்போது, தங்களது வாகனத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோரை அமர வைத்து அதிவேகமாக, சாலைகளில் பைக் ரோஸ் போல் செல்கின்றனர். இதனால், சாலையில் மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைவதோடு, அவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். சில மாணவர்கள் சாலை விபத்தில் பலியாகியும் உள்ளனர்.
ஆனாலும் பெற்றோர், பள்ளிக்கு செல்லும் மாணவர்களிடம் பைக்குகளை கொடுத்தனுப்புவது தொடர்கிறது. இதை தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., ராஜன் கூறியதாவது: பைக்குகளை, 18 வயதுக்கு குறைந்த மாணவர்களிடம் கொடுத்து அனுப்பக்கூடாது என, பெற்றோர்களுக்கும், பைக்கில் வரும் மாணவர்களை பள்ளிகளில் அனுமதிக்கக்கூடாது என, பள்ளி நிர்வாகங்களிடமும் ஏற்கனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதை, சிலர் தொடர்ந்து மீறி வருகின்றனர்.
இனி, தர்மபுரி மாவட்ட பகுதியில் செயல்படும் பள்ளிகளுக்கு பைக், ஸ்கூட்டரில் வரும் மாணவர்களிடம், வாகனங்கள் பறிமுதல் செய்யவும், அவர்களது பெற்றோர் மீதும், பள்ளி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்யவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
'School administration and parents act if they know students are getting on the bike': SP, Warning
Dharmapuri district police SP, Rajan has warned that the school administration will take action against parents who allow students to buy a bike. In Dharmapuri, some students go to school on bikes. By then, more than two people are sitting on their vehicles, speeding on the road like a bike.
As a result, other motorists on the road get scared and they get into an accident. Some students have been killed in road accidents. Yet parents continue to give away bikes to school-going students. There is a demand among the public to prevent this. District SP, Rajan, said:
“The school administration has already instructed parents not to send bikes to students under the age of 18, parents should not be allowed in schools. Some people continue to violate this.
Further, police in schools in Dharmapuri district have been advised to take bicycles and scooters, confiscate vehicles and take action against their parents and school administrators. Further, the police have been ordered to file a case against two-wheelers without a helmet. Thus he said.

No comments:
Post a Comment
Please Comment