சினிமா துறை சார்ந்த இலவச பயிற்சி: வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சினிமா துறை சார்ந்த இலவச பயிற்சி: வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சினிமா துறை சார்ந்த இலவச பயிற்சி: வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு





தெலங்கானா மாநிலம் ஹைதராபத்தை தலைமை யிடமாக கொண்டு ராமோஜி அறக்கட்டளை செயல்படுகிறது. இதில், மிக பிரம்மாண்டமான திரைப்பட நகர்கள் (ஆர்ஏஎப்டி) உள்ளது. 

இந்நிலையில், சினிமாத்துறையில் சாதிக்கவேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக இலவச பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராமோஜி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: 

சினிமா தொடர்பான இயக்குநர், திரைக்கதை எழுதுதல், எடிட்டிங், ஒளிப்பதிவு ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சிறப்பு பயிற்சி வகுப்புகள் உள்ளன. இதில் எந்த துறையில் பயிற்சி வேண்டும் என்று நினைக்கும் ஆர்வமுள்ள இளைஞர்கள் raft.ramojifilmcity.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

திரைத்துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை வைத்தே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதனால், சினிமா துறைக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக பயிற்சி வகுப்புகள் அமையும். 

பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து இருக்கவேண்டும். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வுமூலமே விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படு வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Free Training in Cinema: Call to Apply

The Ramoji Foundation is the headquarters of Telangana State Hyderabad. Of these, there is one of the biggest movie cities (RAPT). In this context, a free workshop has been announced to guide young people who wish to achieve in cinema. 


In this regard, the Ramoji Foundation reports: There are special training courses under 4 categories of Director, Screenwriting, Editing and Cinematography. Interested young people who wish to practice in this field can apply on the website raft.ramojifilmcity.com

The workshops will be conducted with techniques and tools used in the field. Thus, the workshops will be very useful for students who want to go to the cinema industry. Applicants for apprenticeships must complete a degree. Applicants are selected through interviews and written exams. It is stated thus.

No comments:

Post a Comment

Please Comment