குழந்தை தலை முடி வளர
சில குழந்தைகள் பிறக்கும்போது தலையில் முடியில்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளின் தலையில் முடியை எப்படி வளர வைப்பது என்பது பற்றி இதில் பார்ப்போம். குழந்தையின் முடியை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
எனவே குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு முறை தலை அலசிவிடுங்கள். அதேபோல் வெயில் காலமாக இருந்தால் குழந்தைகளின் தலை பகுதி அதிகமாக வியர்க்கும். அந்த வியர்வை குழந்தையின் தலை பகுதியில் படிந்து பிசுபிசுப்பையும் அரிப்பையும் ஏற்படும்.
இதனால் குழந்தைகளுக்கு பொடுகு தொல்லையும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே வெயில் காலமாக இருந்தால் குழந்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலை அலசிவிடுங்கள்.
அதே சமயம் குழந்தையின் தலை முடிக்குத் தேர்வு செய்யும் ஷாம்பிலும் கவனம் தேவை. அதிக ரசாயனம் கலக்காத தரமான ஷாம்புவை சந்தையில் வாங்கி பயன்படுத்தவும். 9-ம் மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தினமும் ஷாம்பு போட வேண்டாம்.
இப்போது பலவகையான எண்ணெய் கிடைக்கின்றது. இருப்பினும் குழந்தைகளின் முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது. அதுவும் தேங்காய் எண்ணெயில் உள்ள உயிர்ச்சத்து ஈ குழந்தையின் முடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது.
குழந்தைகளுக்கு தினமும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி தலைக்கு மசாஜ் செய்வதினால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் செல்லும். இதனால் குழந்தைகளுக்கு தலைமுடி அடர்த்தியாக மற்றும் ஆரோக்கியமாக வளர செய்யும். முக்கியமாக இதைச் செய்வதற்கு முன் உங்கள் குழந்தை நல மருத்துவரையும் அணுகவும்
Grow baby head hair
Some babies are hairless at birth. Let us see how to grow hair on the head of such children. It is very important to keep the baby's hair clean. Therefore, children should have a headache twice a week. Similarly, if the sun is dry, the head area of the baby may be sweating.
That sweat can cause the baby's head to swell and itchiness. Children are more prone to dandruff. So if it is sunny, babies should get their hair done once or twice a day. At the same time, you should also pay attention to the shampoo that you choose for the baby's hair.
Buy and use quality shampoos on the market without mixing too much chemicals. Do not shampoo everyday for children under the age of 9. There are many types of oil available now. However, coconut oil is great for baby hair growth.
Vitamin E in coconut oil is also used for baby's hair growth. Daily massage of scalp with coconut oil for babies will lead to blood flow. This will help children grow their hair thicker and healthier. Prior to doing this, consult your pediatrician

No comments:
Post a Comment
Please Comment