பாஸ்போர்ட் எக்ஸ்பைரி குறித்து இனிமேல் எஸ்.எம்.எஸ் வந்து விடும்..புதிய சேவை தொடக்கம் ! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பாஸ்போர்ட் எக்ஸ்பைரி குறித்து இனிமேல் எஸ்.எம்.எஸ் வந்து விடும்..புதிய சேவை தொடக்கம் !

பாஸ்போர்ட் எக்ஸ்பைரி குறித்து இனிமேல் எஸ்.எம்.எஸ் வந்து விடும்..புதிய சேவை தொடக்கம் !


இப்போதெல்லாம் பாஸ்போர்ட் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் படி வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாடுகளில் காலாவதியாவதற்கு 6 மாத அவகாசம் உள்ள பாஸ்போர்ட் வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது. 

2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்றால் மக்களுக்கு பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டும் என்று ஞாபகம் இருக்கும். 

ஆனால், 10 ஆண்டுக் காலம் என்பதால் பல பேர் புதுப்பிக்க மறந்து விடுகின்றனர். இதனால் அவர்கள் வெளிநாடு செல்லும் பயணம் கடைசி நிமிடத்தில் தடை செய்யப்படுகிறது.

இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, காலாவதி ஆக உள்ள பாஸ்போர்டுகளை வைத்திருக்கும் நபர்களுக்கு குறுந்தகவல் மூலம் நினைவூட்ட இந்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

அதாவது பாஸ்போர்ட் காலாவதி ஆவதற்கு 7 மாதங்கள் அல்லது 9 மாதங்களுக்கு முன்பு, பயனாளிகளின் பாஸ்போர்டில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணுக்கு இரண்டு முறை எஸ்.எம்.எஸ் அனுப்பும் வகையில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கியுள்ளன. 

இந்த சேவை பயனாளிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SMS on Passport Xperi

Nowadays the passport is being issued every 10 years. In most countries, passports are allowed up to 6 months after expiration. Remember that people have to renew their passports once in 2 or 3 years. 

But since it is 10 years old, many people forget to renew. To avoid such problems, the Ministry of External Affairs of India has decided to brief the holders of expired passports by SMS. 

That is, 7 months or 9 months before the passport expires, Passport Service Centers have started sending SMS twice to the number registered on the beneficiary's passport. This service is expected to be very useful to the beneficiaries.

No comments:

Post a Comment

Please Comment