ரூ.12,999-க்கு அமேசான் அறிமுகப்படுத்திய எக்கோ ஷோ 8
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், 8 இன்ச் டிஸ்பிளேயுடன் கூடிய எக்கோ ஷோ 8 -யை அறிமுகப்படுத்தியுள்ளது.
எக்கோ ஷோ 8, ஸ்டீரியோ சவுண்ட் மற்றும் ஷட்டருடன் உள்ளமைக்கப்பட்ட 8 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ளது.
முக்கியமாக, வீடியோ அழைப்புகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம். மேலும் பயனர்களை விரைவாகவும், தடையின்றி மற்ற எக்கோ சாதனங்களுடன் இணைக்கவும் அனுமதிக்கிறது.
டிராப்-இன் அம்சத்திற்கும் கேமராவைப் பயன்படுத்தலாம். இது 8 அங்குல தொடுதிரையுடன் இரண்டு அங்குல நியோடைமியம் ஸ்பீக்கர்கள் மற்றும் செயலற்ற பாஸ் ரேடியேட்டர் உள்ளது.
வருகிற பிப்ரவரி 26 முதல் ஆன்லைனிலும், மொபைல் ஸ்டார்களிலும் கிடைக்கும். இந்தியாவில் இதன் விலை ரூ.12,999. எனினும், அறிமுகத் தள்ளுபடியாக ரூ.8,999-க்கு விற்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அமேசானின் எக்கோ ஷோ 5 வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Echo Show 8 launched by Amazon for Rs 12,999
Amazon, the leading tech giant, has launched the Echo Show 8 with an 8-inch display. The Echo Show 8 features an 8-inch touchscreen with built-in stereo sound and shutter. Importantly, it can be used for video calls. It also allows users to quickly and seamlessly connect to other Echo devices.
The camera can also be used for the drop-in feature. It has two-inch neodymium speakers and a passive bass radiator with an 8-inch touchscreen. Available online and on mobile stores starting February 26th. Its price in India is Rs 12,999.
However, it has been reported that the introductory discount will be sold for Rs 8,999. Earlier, Amazon's Echo Show 5 was well received among customers.

No comments:
Post a Comment
Please Comment