புனே நகரில் பெண்களுக்கு நடமாடும் கழிப்பறை பேருந்து - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புனே நகரில் பெண்களுக்கு நடமாடும் கழிப்பறை பேருந்து

புனே நகரில் பெண்களுக்கு நடமாடும் கழிப்பறை பேருந்து



பெண்கள் சிலர் பழைய பேருந்துகளை நடமாடும் கழிப்பறைகளாக மாற்றியுள்ளனர். பெண்களுக்கான சுத்தமான கழிப்பறைகளுக்கு நிலவும் பற்றாக்குறையை ஈடுகட்ட முனைகின்றன கழிப்பறைப் பேருந்துகள். ஐந்து ரூபாய் பணம் செலுத்தி பெண்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்தலாம். 

சில பெண்கள் குழந்தைகளுக்கு மறைவான இடத்தில் பாலூட்ட கழிப்பறைகளை நாடுகின்றனர். மாதவிடாய்ப் பொருள்கள், பிள்ளைகளுக்கான diapers போன்றவற்றைப் பேருந்தில் வாங்கிக்கொள்ளலாம். 

புனே நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 12 பேருந்துகளை அன்றாடம் சுமார் 200 பெண்கள் பயன்படுத்துகின்றனர். பெண்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான கழிப்பறைகளை வழங்கும் நோக்கத்தில் திட்டத்தை ஆரம்பித்ததாகக் கூறினர் 

பேருந்தைத் தொடங்கிய தொழில்முனைவர்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் 1,000 கழிப்பறைகளைத் திறப்பது அவர்களின் நோக்கம். இந்தியாவின் மாநில அரசாங்கங்கள் பொதுக் கழிப்பறைகளை நிர்வகிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றன. 

அதிலும், பொதுக் கழிப்பறைகளை ஆண்கள் அதிகம் பயன்படுத்துவதால் பெண்கள் தங்கள் பாதுகாப்பைக் கருதி அவற்றைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர்.


A toilet bus for women in Pune


Some women have turned old buses into walkable toilets. Toilet buses tend to offset the shortage of clean toilets for women. Women can use the toilet for five rupees. Some women seek lactation toilets for children. Menstrual items, diapers for children can be purchased by bus. About 200 women use 12 buses in different parts of Pune city daily.

Bus entrepreneurs said they started the project with the aim of providing safe, healthy toilets for women. Their goal is to open 1,000 toilets over the next five years. The state governments of India face difficulty in managing public toilets. More and more, men use public toilets and women are reluctant to use them because of their safety.

No comments:

Post a Comment

Please Comment