`மாணவர்களின் பசியாற்றும் அட்சய பாத்திரம்!'- திருச்சி பள்ளியின் அசத்தல் திட்டம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

`மாணவர்களின் பசியாற்றும் அட்சய பாத்திரம்!'- திருச்சி பள்ளியின் அசத்தல் திட்டம்

`மாணவர்களின் பசியாற்றும் அட்சய பாத்திரம்!'- திருச்சி பள்ளியின் அசத்தல் திட்டம்



திருச்சி புத்தூர் அடுத்த விஸ்வநாதபுரம் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் இந்தத் திட்டம் திருச்சி மாவட்டத்திலேயே முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அப்பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தினமும் காய்கறிகளை ஆர்வத்தோடு கொண்டுவந்து தருகிறார்கள்.

திட்டத்தின் துவக்க விழாவில், வட்டார கல்வி அலுவலர் அருள்தாஸ் நேவிஸ், ஜெயலட்சுமி, நகராட்சிப் பள்ளியின் தலைமையாசிரியர் சிராஜூதீன், யோகா பயிற்சியாளர் காயத்ரி, ஓய்வுபெற்ற ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் சிவக்குமார், திருச்சி சிப்காட் தாசில்தார் கோகுல், 

திருச்சி தன்னார்வு அமைப்பின் நிறுவனர் மனோஜ் தர்மர், திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் தலைமையாசிரியர் ஜீவானந்தம்,``மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, 

கடந்த 2 வருடங்களாக எங்கள் பள்ளியில் மக்கள் பங்களிப்போடு 150 மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர்கள் வீட்டில் காய்கறிகளை அதிகம் உண்பதில்லை எனப் பெற்றோர் தொடர்ந்து எங்களிடம் கூறி வந்தார்கள்.

அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் பல திட்டங்கள் குறித்து யோசித்தோம். அந்தவகையில் உருவானதுதான் அட்சயபாத்திரத் திட்டம். பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அட்சய பாத்திரத்தில் பொதுமக்கள் மற்றும் 

பெற்றோர் தினமும் தங்களால் இயன்ற காய்கறிகளை பள்ளிக்குக் கொண்டுவந்து போடுவார்கள். அதேபோல், மாணவர்களும் தங்கள் வீடுகளில் இருந்து தினமும் ஏதாவது காய்கறிகளை எடுத்துவந்து போட வேண்டும். 


அப்படிச் சேர்ந்த காய்கறிகள் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுடன் சேர்த்துச் சமைத்து, மதிய உணவாக மாணவர்களுக்குப் பரிமாறப்படும். ஏற்கெனவே உள்ள காய்கறிகளுடன் கூடுதலாகக் காய்கறிகள் சேர்ப்பதால், மாணவர்களுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கிறது. 

இதன்மூலம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதுதான் இத்திட்டத்தின் முதன்மையாக நோக்கம். இதனால் மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க முடியும். 

தினமும் காய்கறிகளை விலை கொடுத்து வாங்க முடியாத தினக்கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகளும் பயனடைவார்கள். இந்தத் திட்டம் ஏழை மாணவர்களின் உடல்நலனுக்குப் பெரும் உதவியாக இருக்கும். 

இந்தத் திட்டத்துக்கு எவ்விதமான பணமும் வசூலிப்பதில்லை; செலவும் இல்லை. முழுக்க முழுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்துவோம்" என்றார். 

அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் அந்தப் பகுதியில் உள்ள பல ஏழை மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு இந்தத் திட்டம் கல்வியுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் என்கிறார்கள்.



`The students 'hungry latent role!'


This project has been implemented for the first time in Trichy district at Viswanathanapuram Subbaiya Memorial Middle School, Trichy. The pupils from their homes everyday vegetables eagerly brought tarukirarkaltittat the opening ceremony, Regional Education Officer Aruldas Nevis, jeyalatcumi, municipal school headmaster cirajutin, yoga practitioner Gayatri, retired Teacher Education Organization Principal Sivakumar, Trichy SIPCOT tehsil Gokul, the Manoj ucci Bodhidharma the founder of the volunteer organization, Project Coordinator attended by Sivakumar and others.

Speaking at the event, the Head of School, Jeevanandam said, “We have been working on a breakfast program for 150 students with the involvement of our school for the past 2 years with an interest in the welfare of the students. At this point, the parents continued to tell us that the students did not eat much of the vegetables at home. That is how the Akshayapatrikam project originated. The public and parents will bring vegetables to the school every day, in the role of latitude placed in the school. Similarly, students should bring some vegetables from their homes daily.

The vegetables will be cooked with the nutrients of the school children and served as a lunch for the students. Adding more vegetables to the already existing vegetables gives students more nutrition. The primary goal of the program is to reduce the malnutrition in children. This will help maintain the health of the students. 

The children of working parents who cannot afford to buy vegetables daily will also benefit.This program will be of great help to the health of the poor students. The project does not charge any money; There is no cost. We will work with the full participation of students and the public.

No comments:

Post a Comment

Please Comment