பொதுத் தேர்வில் காப்பி அடித்தால் என்ன தண்டனை தெரியுமா?
10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் என்ன தண்டனை என்ற விவரத்தை தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொதுத்தேர்வில் காப்பி அடித்தல் போன்ற முறைகேட்டில் மாணவர்கள் ஈடுபட்டால் அடுத்த 2 முறை தேர்வு எழுத முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாளை வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகளுக்கு தேர்வெழுத தடைவிதிக்கப்படும்.
வினாத்தாளில் விடைகளைக் குறித்து அதனை அடுத்த மாணவர்களுக்கு கொடுத்தால், அவர் உடனடியாக தேர்வறையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் மாணவர்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வெழுத வேண்டும் என தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது.
Do you know what the penalty is if you hit the public exam?
Students of Class 10,11,12 are awaiting the general election. In this case, the Tamil Nadu Government Examinations Directorate has released the details of the punishment of students in the general election. Accordingly, if the students are involved in such irregularities such as coffee in the general election, the next 2 If you engage in activities such as publishing the questionnaire, you will be banned from writing for 3 years. It is also reported that if students are given the answer in the quiz, they will be expelled immediately. The Government of Tamil Nadu Government Examinations Directorate has asked students to take their exams without considering any future problems.
No comments:
Post a Comment
Please Comment