போட்டி தேர்வுகளை வெல்ல புத்தகங்கள்
விருதுநகர் : தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் வேலைவாய்ப்பில் போட்டியும் அதிகரித்து வருகிறது. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே அரசு தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.
இதில் வெற்றி பெற எந்த புத்தகம் படித்தால் எளிதில் மதிப்பெண்களை அள்ளலாம் என்பது விருதுநகரை சேர்ந்த சிக்கந்தர் ஹயாத்கானுக்கு அத்துப்படி . இவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார்.
1982 முதல் புத்தக விற்பனை பணி மேற்கொண்டு வரும் இவர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 4, வி.ஏ.ஓ., தேர்வுக்கான புத்தகங்கள், மத்திய, மாநில அரசு துறை சார்ந்த இதர போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என பொது தகவல்கள் அடங்கிய அனைத்து புத்தகங்களையும் விற்று வருகிறார்.
அரசு அதிகாரிகள், ஊழியர்கள், கலெக்டர் அலுவலகம் வருவோர் தங்களது குடும்பத்தினர் பிள்ளைகளுக்காக தேவையான புத்தகங்களை இவரிடம் வாங்கி செல்கின்றனர்.
அரசு ஊழியர்களுக்கான விடுமுறை விண்ணப்பம், கடன் விண்ணப்பம், ரெவின்யூ ஸ்டாம்ப், போனாக்களும் விற்கிறார். ஒருவர் கேட்கும் குறிப்பிட்ட புத்தகம் இல்லையென்றால் ஒரிரு நாட்களில் வாங்கி தந்து விடுகிறார்.
சிக்கந்தர் ஹயாத்கான் கூறுகையில், "என்னிடம் புத்தக வாங்கி படித்த பலர் தற்போது நல்ல நிலைமையில் நல்ல பணியிடத்தில் உள்ளனர். மகிழ்ச்சியாக உள்ளது.
மேலும் புத்தகங்கள் தேவைப்படுவோர் பெரிய பள்ளிவாசல் சிவகாமிபுரம் அருகே உள்ள என்னுடைய ஸ்டேஷனரி கடையை அணுகலாம்," என்றார்.
Books to beat competitive choices
Virudhunagar: With increasing population in the current period, employment competition is increasing. It is only with hard work and diligence that the government can win elections. According to Sikandar Hayatkhan from Virudhunagar, it is easy to score any book to win. He is selling books in front of the District Primary Education Office at the Collector's office.
She has been working on book sales since 1982, including DNPSC, Group 1, 2, 4, VAO, Books of Examination, General and other Public Sector Books Selling all the books. Government officials, staff and collector's office buy books for their families.
Sells Holiday Application, Loan Application, Revenue Stamp, Bonuses to Government Employees. If there is no specific book one asks for, he buys it in two days. Says Sikandar Hayatkhan, "Many people who have read the book to me are now in good condition and in good working condition. Happy and needy books can access my stationary shop near Sivakamipuram."

No comments:
Post a Comment
Please Comment