மத்திய அரசு ஊழியர்களின் பென்சன் விதிகளில் முக்கிய மாற்றம்!
மத்திய அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கை தொடர்பாக மோடி அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, அரசு ஊழியர் ஓய்வூதியம் தொடர்பான ஒரு உத்தரவில், 01.01.2004 அல்லது அதற்குப் பின் பணியில் சேர்ந்தவர்கள்,
தற்போதுள்ள என்.பி.எஸ். எனப்படும் தேசிய ஓய்வூதிய முறைக்குப் பதிலாக மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 1972ன் கீழ் வருவார்கள்.
இவ்வுத்தரவு ஏராளமான மத்திய அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய உத்தரவின்படி, மத்திய அரசு ஊழியர்கள் வரும் மே 31ஆம் தேதிக்குள் இப்புதிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது என்.பி.எஸ். முறைக்குப் பதிலாக மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 1972க்கு மாறிக் கொள்ளலாம்.
ஒருமுறை மட்டுமே இவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும்; அதுவே இறுதியானது.
வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி, புதிய ஓய்வூதிய முறைக்கு மாறியோரின் என்.பி.எஸ். கணக்குகள் வரும் நவம்பர் 1 முதல் முடக்கப்படும்.
Major change in central government employees' Benson rules
The Modi government has made a major decision regarding the long-standing demand of central government employees. Accordingly, in an order relating to civil servants' pension, those who joined the service on or after 01.01.2004, are entitled to the existing NPS. The Federal Civil Service (Pension) Rules, 1972, will replace the National Pension System. This report is expected to be useful for a number of central government employees.
According to the new order, central government employees can take advantage of the new offer by May 31st. That means that NBS is not. Central Civil Services (Pension) Rules, 1972 This can only be changed once; That is the ultimate. Changes will be considered and results will be announced by September 30. Accordingly, the NPS of those who switched to the new pension system. Accounts will be frozen from November 1.

No comments:
Post a Comment
Please Comment