*12 ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து, மறு தேர்வை அறிவிக்க வேண்டும்* தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை
உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வின் பாதிப்பில் இருந்து இன்னும் இந்த உலகம் மீண்டுவராத சூழலில்,நம் தமிழக மக்கள் பெரும்பாதிப்பிற்கு ஆளாகிவிடக்கூடாது என்னும் பேரச்சத்தில் தமிழக அரசானது தங்களது தலைமையில் எடுத்துவரும் நடவடிக்கைகள் பெரும்பாராட்டிற்குரியவை.. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க அத்தோடு 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடைபெற்று வந்துகொண்டிருந்தது.
கடந்த இருதினங்களாக பெரும் அபாயத்தை நம் மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள் என்னும் சூழலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட , அதேநேரத்தில்
நேற்று நடைபெற்ற
12 ம் வகுப்பு தேர்வில் 34000 மாணவர்கள் அச்சத்தின் காரணமாகவும், போக்குவரத்து வசதியின்மை காரணமாகவும்
கலந்துகொள்ள முடியாத சூழலில்,
தேர்வு நடைபெற்று இருக்கிறது.
இதில் கலந்துகொள்ளாத மாணவர்களின் மனநிலையை அரசாங்கம் நன்கு யோசித்துப்பார்க்க வேண்டும்.
கொரோனா என்னும் பெரும் நோயின் அச்சத்தோடு தேர்வை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் என்ன மனநிலையோடு தேர்வை எழுதி இருப்பார்கள் என்பதனையும் கவனத்தில்கொண்டு, நடைபெற்ற தேர்வை உடனடியாக ரத்துசெய்து அறிவிப்பதோடு பின்னொரு நாளில் அத்தேர்வு நடைபெறும் என்பதனையும் தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்..
சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்.
No comments:
Post a Comment
Please Comment