பிளஸ் 2 தமிழ் வினாத்தாளில் கேள்விகள் எளிமை: மாணவர்களுக்கு சமூக அக்கறையை ஏற்படுத்தும் வினாக்களுக்கு வரவேற்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பிளஸ் 2 தமிழ் வினாத்தாளில் கேள்விகள் எளிமை: மாணவர்களுக்கு சமூக அக்கறையை ஏற்படுத்தும் வினாக்களுக்கு வரவேற்பு

பிளஸ் 2 தமிழ் வினாத்தாளில் கேள்விகள் எளிமை: மாணவர்களுக்கு சமூக அக்கறையை ஏற்படுத்தும் வினாக்களுக்கு வரவேற்பு


தமிழகம் முழுவதும் இன்று நடந்த பிளஸ் 2 தமிழ் வினாத்தாளில் கேள்விகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இலக்கணத்திலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 

மேலும், மாணவர்களுக்கு சமூக அக்கறையை ஏற்படுத்தும் வகையிலும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. நடப்பாண்டில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு, தேர்வு முறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு தொடங்கியது. இதுவரை தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடத்தில் முதல் தாள், இரண்டாம் தாள் என இருநாட்கள் தேர்வுகள் நடைபெறும். 

நடப்பாண்டு முதல் தமிழ்மொழிப் பாடத்தில் இலக்கணம், செய்யுள், உரைநடை ஆகிய பாடங்கள் ஒரே தாளாக ஆக்கப்பட்டது. அக மதிப்பெண் 10 போக 90 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட்டது. 

தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு இன்று நடந்த தமிழ்மொழிப் பாடத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர். 

இதனால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் எனவும், மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கூறியதாவது: தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்தது. 

அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்காலங்களில் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இலக்கணப் பாடங்களிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 

சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனில் அக்கறை கொள்ளும் வகையிலும் கேள்விகள் இருந்தது வரவேற்கத்தக்கது, என்றனர். இதுதொடர்பாக தமிழாசிரியர் நீ.

இளங்கோ கூறியதாவது: "தமிழ் வினாத்தாள் எளிமையாக இருந்தது. உரைநடை, செய்யுள் தவிர இலக்கணத்திலிருந்து அதிகமான கேள்விகள் இடம்பெற்றது மாணவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் முன்னேற்பாடாகும். 

அதில் நெடுவினாக்களில், நெகிழி தவிர்த்து, நிலத்தை நிமிர்த்து என்ற வினா சமூக அக்கறையோடு கேட்கப்பட்டிருந்தது. அடுத்தது, சாலை விபத்தில்லா தமிழ்நாடு- இக்கூற்றை நனவாக நாம் செய்ய வேண்டியவன யாவை என்ற வினாவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. 

மேலும், நடிகர் திலகம் என்ற பட்டம் சிவாஜிக்கு பொருத்தமானதே என்பதை நிறுவுக என்ற வினாவும் வரவேற்கத்தக்கது" என்றார்.


Plus 2 Tamil Questionnaire Simplicity: Welcome to Questions that Make Social Responsibility for Students


Students were happy that the questions were simple in the Plus 2 Tamil Questionnaire held throughout Tamil Nadu today. More and more questions were asked from the grammar to address the state's competitive choices. In addition, questions were also asked to create social concern for the students. In the current year, the new syllabus for classes 10 and 2 has been implemented and some changes have been made in the selection process.

Accordingly, the Plus-2 government elections began today in Tamil Nadu and Puducherry. So far, the Tamil and English subjects will have two-day exams as first and second papers. In the first Tamil language course from the beginning of the year, grammar, syllabus and prose were made into one sheet. Going to the internal score of 10, 90 was chosen for the score. The students were enthusiastically writing the exams as they were very easy to change in the selection process and the questions that were asked in today's Tamil Language Course.

They said that they could get higher marks and students would be able to score higher. Some of the Plus 2 students said: The exam question paper was simple. There is hope that you can score higher. More questions were asked from grammar subjects to face competitive choices in the future. The questions were also of concern to the environment and social welfare. Thank you.

Ilango said: "The Tamil question paper was simple. Most of the questions from grammar, except prose and verse, were prepared to prepare students for competitive exams. The question of what should be done was aroused, and the question of establishing whether the title of actor Tilak is appropriate for Shivaji is welcome. ”

No comments:

Post a Comment

Please Comment