வாகனம் ஓட்டும்போது தூக்கம் வருகிறதா? தூக்கம் கலைக்கும் கருவி: ஒரு முழுத்தொகுப்பு..!
நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? உங்களைக் கண்காணிக்க பக்கத்தில் யாரும் இல்லையா? என்ன செய்வது?
வாழ்க்கைப் பயணத்தில் வாகன பயணம் என்பது தவிர்க்க முடியாதது. ஒரு நாளும் ஒரு பொழுதும் சாலைகளுக்கு ஓய்வு கொடுக்க வாகனங்கள் அனுமதிப்பதில்லை.
இதில் அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோவதும், உடல் உறுப்புகள் சிதைவதும் அன்றாட நிகழ்வாகி விட்டன.
விபத்துகளுக்கான பெரும் காரணங்களுள் ஒன்றாக இருப்பது ஓட்டுநரின் தூக்கக் கலக்கம்தான்.
சில வினாடிகளில் ஓட்டுநருக்கு ஏற்படும் தூக்கம் பல குடும்பங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுகின்றன. இதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் தூக்கத்தைக் கலைத்து அலாரம் எழுப்பும் கேமரா.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இது சந்தைக்கு வந்து விட்டது.
அனைத்து தனியார் பேருந்துகளிலும் இதைப் பொருத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரையிலும் நடைமுறைப்படுத்த அரசும் வாகன ஓட்டிகளும் ஆர்வம் காட்டவில்லை. சென்னையில் இயங்கும் சில ஆம்னி பேருந்துகளில் மட்டும்
இது தற்போது பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமரா ட்ரைவரின் கண்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும். அவரின் இமைகள் சில நொடிகள் மூடியே இருந்தால் உடனே சத்தம் எழுப்பி விழிப்படையச் செய்யும். தூங்குவது மட்டுமல்ல பக்கவாட்டில் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் சாய்ந்தாலும்கூட உடனே சத்தம் எழுப்பும்.
அது மட்டுமன்றி, ஓட்டுநரின் இருக்கையில் ஓர் அதிர்வை உருவாக்கி எழுப்பி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தூக்கம் கலைக்கும் கேமராக்களை தனியார் மட்டுமல்லாது அனைத்து அரசு பேருந்துகளிலும்,
லாரிகள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்தினால் ஏராளமான விபத்துக்களைத் தடுக்க முடியும் என்பது ஓட்டுநர்களின் கருத்தாக உள்ளது.
பல லட்சம் செலவு செய்து வாகனம் வாங்கும் நாம் உயிர்காக்கும் கருவியான
இந்த கேமராவை 10,000 ரூபாய் கொடுத்து வாங்க தயக்கம் காட்டுவதுதான் சிக்கலை உருவாக்குகிறது. இது குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் விருப்பமாக உள்ளது.
Do you fall asleep while driving? Sleep Disinfectant: A Complete Set ..!
Are you a long-distance driver? Is there anyone on the side to track you? what to do? Traveling in the automobile is inevitable. Vehicles are not allowed to rest on the roads for a day. Thousands of lives and disfigurement have become a daily occurrence. One of the biggest causes of accidents is driver disturbances. Driver's sleep in just a few seconds is questioning the future of many families.
The invention of the sleeping sound alarm camera. It was on the market a few years ago. An attempt was made to fit this on all private buses. But so far, the state and motorists are not interested in implementing it. It is currently only fitted with some Omni buses operating in Chennai. This camera will keep an eye on the driver. If his eyelids remain closed for a few seconds, he will immediately raise the alarm. Not only sleeping, but also the side, this side, and even if it is leaning, will immediately make noise.
Not only that, it is designed to create a vibe in the driver's seat. Drivers are of the opinion that applying these sleeping cameras to all vehicles, including private buses, trucks and cars, can prevent many accidents. The problem is that we are reluctant to buy this life-saving camera for Rs. Motorists' desire is to raise awareness about this.

No comments:
Post a Comment
Please Comment