நீங்கள் தினமும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமா? உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ் இதோ!
எவ்வளவு தூங்கினாலும் சிலருக்கு களைப்பாக இருக்கும், பகல் வேலையிலே தூக்கம் கண்ணை கட்டி சோர்வாக இருப்பார்கள். இதனால் உங்களின் உடல் நலத்தில் தரம் குறைகின்றது. மற்ற எந்த விடயங்களிலும் நாட்டம் இல்லாமல் இருப்பார்கள். நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க சில சிம்பிளான டிப்ஸ் கீழே தரப்பட்டுள்ளது, அதை இங்கு காண்போம்.
காலை உணவு : காலை உணவு தான் நம்மை நாள் முழுக்க சுறுசுறுப்பாக வைக்க உதவுகின்றது. அதனால் நீங்கள் தவறாமல் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு அந்நாளுக்கு தேவையான சக்தியை காலை உணவு தான் தருகின்றது.
காலையில் பெரும்பாலானோர் காபி மற்றும் டீ குடிப்பதையே வழக்கமாக வைத்திருப்பார்கள். அதை தவிர்க்க வேண்டும். காலை வேலையில் வயிறு நிரம்ப உண்ணவில்லை என்றாலும் பாதி வயிறு உணவாவது உண்ண எடுத்துக் கொள்ளலாம்.
காலையில் பெரும்பாலும் இட்லி,முழுமையான சத்துக்களைக் கொண்ட தானியங்கள், பழங்கள், முட்டைகள் போன்றவற்றை உண்பது உங்கள் உடலுக்கு நன்மையை தரும். இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
உரையாடுவதில் கவனம் தேவை:
மற்றவர்களுடன் பேசி உரையாடும் போது, எப்போதும் கலகலப்பாக இருங்கள். மற்றவர்களுடன் நன்கு கலகலப்பாக பேசி உரையாடும் போது உங்களுக்கு உடல் சோர்வு தெரியாது. அதனால் இதை பாலோ பண்ணுங்கள்.
சிலருக்கு புது முகங்களுடன் பழகுவது பதற்றத்தை தரும். நீங்கள் இந்தப்பிரிவை சார்ந்தவர்கள் என்றால், அடுத்தவருடன் பழகுவதில் கவனம் செலுத்துங்கள். நாளைடைவில் பதற்றம் மறைந்து, உங்களுக்கு சோர்வும் குறைந்து இருக்கும்.
உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுங்கள்: வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது அதவாது பணிக்கு செல்வீர்கள் என்றால் நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும்.
காலையில் எழுந்து சிலருக்கு உடற்பயிற்சி செய்வது பிடிக்காது. அவர்கள் மூளைக்கு வேலை தருமாறு பல வேலைகளை செய்யலாம்.
காலையில் எழுந்ததும் உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்யலாம், ஓவியம் தீட்டுதல், எழுதுவது போன்ற செயல்களை செய்யலாம். இவற்றை செய்வதன் மூலம் உடலை உங்களால் தெம்பாக வைக்க முடியும் . வேலைக்குச் செல்வதற்கு முன் கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்வது உடல் சுறுசுறுப்பாக இருக்க வகைசெய்யும்.
ஆனால் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் மூளைக்கு வேலை செய்யலாம். ஓவியம் வரைவது, எழுதுவது ஆகியவற்றைச் செய்வது உடலைத் தெம்பாக வைத்திருக்கும்.
தண்ணீர் அருந்துங்கள் :
உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. பலர் அதிகமான அளவு நொறுக்குத் தீனிகளை தின்றுவிட்டு தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் ஒரு நாளைக்கு 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.
தூக்கத்தைத் தள்ளிப் போடாதீர்கள் :
இரவு நேரங்களில் தொலைக்காட்சி அதிக நேரம் பார்ப்பது, செல்போன்களை உபயோகிப்பது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். இவற்றால் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டும் பாதிக்கப்படுகின்றது. அதனால் குறைந்தது 7 மணிநேரம் தூங்குவதை வழக்கமாகிக் கொள்ளுங்கள்.
Do you want to be active every day? Here Are Simple Tips For You!
No matter how much you sleep, some people will get tired and sleep in the daytime. This reduces the quality of your health. They will not pursue any other matters. Below are some simple tips to keep you active throughout the day, and you'll find it here.
breakfast :Breakfast is what helps us stay active throughout the day. So you should have breakfast regularly. Breakfast is the energy we need for the day. Most people in the morning usually drink coffee and tea. It should be avoided. Even if you do not eat your stomach full in the morning, you can eat half your stomach. Eat plenty of whole grains, fruits and eggs in the morning, which are good for your body. They also contain plenty of nutrients.
Concentrate on Conversation: Always be lively when talking to others. You may not know physical fatigue when interacting with others. So please do this. For some, getting acquainted with new faces can be tense. If you belong to this category, focus on getting used to the next one. Tomorrow the tension will disappear and you will feel exhausted.
Give Body And Brain Work: If you go out of your way to work, you need to exercise. Some people don't like getting up in the morning and exercising. They can do many jobs to get the brain to work. When you wake up in the morning, you can do your favorite work, like painting and writing. By doing these you will be able to keep the body in place. Exercising for some time before going to work is a great way to stay physically active. But if you don't like exercising when you wake up, the brain can work. Doing painting and writing will keep the body warm.
Drink Water: Though the body is low in water, we cannot be active. Many abstain from drinking too much soda and avoid drinking water. But it is necessary to drink up to 4 liters of water a day.
Don't put off sleep: Avoid watching TV at night or using cell phones. It affects both health and mental health. So be sure to sleep at least 7 hours a day.

No comments:
Post a Comment
Please Comment