மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.! மாலையிலும் சரிந்தது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.! மாலையிலும் சரிந்தது

மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.! மாலையிலும் சரிந்தது

பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் காரணமாக, தங்கம் விலை அண்மை காலமாக விண்ணைத் தொட்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதாரமே பெரும் சரிவை சந்தித்துள்ளன. இதனால், தங்கம் விலையும் தொடர்ந்து ரூ. 33,000-க்கு அதிகமாகவே விற்பனையாகி வருகிறது. 

இது பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சத்தை எட்டியது. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் உயர்வுடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, கடந்த இரு தினங்களாக சரிவை சந்தித்துள்ளது. 

இன்று காலை நேர நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்தது. இந்த நிலையில், மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 33,256க்கு விற்பனையாகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 7 சரிந்து ரூ. 4,157 ஆக வர்த்தகமாகிறது. அதேவேளையில், வெள்ளி விலையும் கிடுகிடுவென குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 600 குறைந்து ரூ.48,900 ஆகவும், கிராம் வெள்ளி 60 காசுகள் சரிந்து ரூ.48.90 ஆகவும் விற்பனையாகி வருகிறது. 

கடந்த சில நாட்களாக கடுமையாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்றும் சற்று குறைந்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Gold is the price of happiness over happiness! The evening also fell


Due to various international events, the price of gold has been hitting the market lately. In particular, the global economy is hit by the coronavirus. As a result, gold prices continue to increase by Rs. Selling more than 33,000. This has put the public at great risk. Gold prices, which have been rising for the past few days, hit a new high for the first time in history. Gold prices, which rose earlier this week, have fallen over the past two days.

As of this morning, gold prices were down by Rs. In the evening, the price of gold fell to Rs. Thus, a shaving ornamental gold costing Rs. Selling for 33,256. One gram of gold costs Rs. 7 declined to Rs. 4,157 being traded. At the same time, the price of silver has plummeted. 1 kg of silver 600 was down by Rs. With gold prices rising sharply over the past few days, a slight decline today has made customers happy.

No comments:

Post a Comment

Please Comment