கோடைக்கு ஏற்ற குளிர்ச்சி தரும் தர்பூசணியை எடுத்துகொள்வதால் உண்டாகும் நன்மைகள்....!
தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் உள்ள அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.
கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறையும். அதனை இப்பழம் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால்,
இதனை சாப்பிட்டு வர மலசிக்கல் தீரும்.
நமது உடலுக்கு தேவையான தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவைகள் தர்பூசணியில் உள்ளதால், இது உடல் உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது.
தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம் குறையும். உடல் சூடு தணியும். தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதோடு, இதயத்துடிப்பை சீராக்கும்.
ஒரு டேபிள்ஸ்பூன் தர்ப்பூசணி விதைகளை அரைத்து அதில் கொஞ்சம் வெந்நீரை ஊற்றி, அது ஆறிய பின் குடித்து வர, சிறுநீர்க் கற்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம்.
தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும், கண்கள் குளிர்ச்சி பெறும்.
இப்பழ சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பின்னர் கழுவ, சருமம் பளபளப்பாகும். தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால், ஆஸ்துமா பிரச்சனைக்கு மருந்தாகிறது. தர்பூசணி லைக்கோபீன் மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.
நீர் பழம் என்று கூறப்படும் இதில் கலோரியும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும், எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கும்.
Benefits of picking a cool watermelon for summer ....
Eating too much watermelon helps the kidneys work better and prevents diseases like urinary tract obstruction and water shortage. Urine releases all the toxins from the body. During the summer, the body's water sweats out and the blood is diluted. It can be prevented by eating fruit. Watermelon fruits are high in fiber and water, making them constipated. Watermelon contains minerals, iron, vitamin, lime, phosphorus, and calcium supplements that help our body function smoothly.
Hot water mixed with watermelon juice will reduce the heat. Heat relaxation. Watermelon is also rich in potassium. It reduces the chances of a heart attack and normalizes heart rate. Grind a tablespoon of watermelon seeds and pour a little bit of water in it, and then drink it after it is healed. Drinking water with watermelon juice helps to relieve sore throats and cool eyes.
Mix the lemon juice with this juice and apply it on the face, dry it and then wash the skin. Watermelon has high levels of vitamin C, making it an asthma problem. Watermelon lycopene prevents cancer in the chest, lungs, cervix, and colon. The water is said to be low in calories and is said to help you lose weight. Lycopene in watermelon protects the bone and prevents osteoporosis, a bone disease.
No comments:
Post a Comment
Please Comment