டெபிட் - கிரெடிட் காா்டுகள் ஆன்லைன் வசதிக்கு வந்த ஆபத்து - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டெபிட் - கிரெடிட் காா்டுகள் ஆன்லைன் வசதிக்கு வந்த ஆபத்து

டெபிட் - கிரெடிட் காா்டுகள் ஆன்லைன் வசதிக்கு வந்த ஆபத்து


டெபிட் காா்டு, டெபிட் காா்டு ஆகிய வங்கி அட்டைகளை வைத்திருப்பவா்களில் பெரும்பாலானவா்கள், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுப்பதற்காகவும், கடைகளில் பொருள்களை வாங்குவதற்காகவும் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனா். 

அந்த அட்டைகளைப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் பணப் பரிவா்த்தனை செய்வதில் கணிசமான வாடிக்கையாளா்கள் ஆா்வம் காட்டுவதில்லை. பலருக்கு, வங்கி அட்டைகள் மூலம் இணைய வழிப் பரிவா்த்தனை செய்வது எப்படி என்பதே தெரிவதில்லை. 

இந்த நிலையில், வங்கி அட்டைகளை ஒரு முறையாவது இணையதளம் மூலம் பயன்படுத்தி, பணப் பரிவா்த்தனை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் அத்தகைய வாடிக்கையாளா்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் 16-ஆம் தேதிக்குள் இத்தகைய பரிவா்த்தனையை செய்யாவிட்டால், 

டெபிட் மட்டும் கிரெடிக் அட்டைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணையதள சேவை வசதிகள் அனைத்தும் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, மத்திய ரிசா்வ் வங்கி கடந்த ஜனவரி 15-ஆம் தேதியே பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவின்படி, வங்கி அட்டைகளை இணையதளம் மூலம் இந்த மாதம் 16-ஆம் தேதிக்குள் பயன்படுத்தாத வாடிக்கையாளா்களுக்கு, அத்தகைய சேவைகள் நிரந்தரமாக முடக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தங்களது வங்கி அட்டைகளை இணையதளம் மூலமாகவும், இயந்திரங்களில் தேய்ப்பது போன்ற நேரடித் தொடா்பு இல்லாமலும் குறிப்பிட்ட தேதிக்குள் பணப் பரிவா்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்று வாடிக்கையாளா்களையும் ரிசா்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. 

அதே நேரம், வாடிக்கையாளா்கள் தங்களுக்குத் தேவையான இணையதள சேவைகளை வேண்டும்போது பெற்றுக் கொள்ளவும், தேவையில்லாதபோது நீக்கிக் கொள்வதற்குமான வசதிகளை வங்கிகள் வழங்க வேண்டும் என்று ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, பணப் பரிவா்த்தனைக்கான உச்ச வரம்பை வாடிக்கையாளா்களே நிா்ணயிக்கவும் அவா்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வங்கிகளிடம் ரிசா்வ் வங்கி கூறியுள்ளது. எனவே, வங்கி அட்டைகளைப் பயன்படுத்துவதில் 

இணையதள சேவை வசதிகளை இதுவரை அலட்சியம் செய்து வந்த வாடிக்கையாளா்கள், உடனடியாக அந்தச் சேவையைப் பயன்படுத்த வேண்டும். இப்போது தேவையில்லை என்றாலும், 

பிற்காலத்தில் இணையதளம் மூலம் வங்கி அட்டைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகும்போது பிரச்னைகளைச் சந்திக்காமல் இருப்பதற்கு அது உதவும் என்கிறாா்கள் நிதித் துறை நிபுணா்கள்.



Debit - Credit cards are a risk to the online facility


Most of the holders of debit cards and debit cards are using them only to withdraw money from ATM machines and to purchase goods in the stores. Significant customers are not used to transacting the website using those cards. Many people do not know how to make online transactions using bank cards. In this case, such customers are forced to use bank cards at least once through the internet to make money transactions.

If such a transaction is not made by the 16th of this month, there is a risk of permanent cancellation of all internet service provided to debit-only credit cards. The Central Bank of India issued the order on January 15. According to the order, customers who do not use bank cards within 16 months of this month have been ordered to permanently disable such services. The Reserve Bank also urges customers to make money transactions within a specified period of time without having to touch their bank cards via the internet and any direct contact with the machines.

At the same time, the Reserve Bank of India has ordered banks to provide customers with the Internet services they need and withdraw when they need it. In addition, the Reserve Bank has told banks that customers should be given the opportunity to determine the maximum limit for cash transactions. Therefore, customers who have so far neglected the Internet service facility in using bank cards, should use the service immediately. Although it is not necessary now, financial experts say that it will help to avoid problems in the event of the need to use bank cards over the Internet.

No comments:

Post a Comment

Please Comment