இணையத்தளத்தில் வைரலாகும் "டல்கோனா காஃபி"..20 நிமிஷத்துல செஞ்சுடலாம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இணையத்தளத்தில் வைரலாகும் "டல்கோனா காஃபி"..20 நிமிஷத்துல செஞ்சுடலாம்!

இணையத்தளத்தில் வைரலாகும் "டல்கோனா காஃபி"..20 நிமிஷத்துல செஞ்சுடலாம்! 

ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் இந்த சூழலில் பலர் அவர்களது தனித்தன்மையை வெளிக்கொணர்ந்து வருகின்றனர். 

சும்மாவே சிறயவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவர். இப்போது ஊரடங்கு வேறு அமலில் இருப்பதால், சமூக வலைத்தளங்களில் பல விஷயங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. 


அதில் ஒரு தான் இந்த டல்கோனா காபி. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த டல்கோனா காபியை செய்து, இணைய தளத்தில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். சரி... 

இந்த காபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

முதலில், 2 ஸ்பூன் காபி தூள், 2 ஸ்பூன் பால் மற்றும் 2 ஸ்பூன் சுடு தண்ணீர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு சுமார் 20  நிமிடம் வரை தொடர்ந்து அதனை அடித்துக் கொள்ள வேண்டும். 

அதாவது அது ஒரு கெட்டியான க்ரீம் பதத்திற்கு வரும் வரை பீட் செய்து கொள்ளவும். பின்னர், அதனை நன்கு குளிரூட்டி ஒரு டம்ளர் பாலின் மேல் அதனை வைத்து விட வேண்டும்.. அவ்வளவு தான் டல்கோனா காபி ரெடி..

Read more... 

No comments:

Post a Comment

Please Comment