போட்டித் தேர்வு குறித்த பயத்தை போக்குவது எப்படி...?
👉இத்தனை லட்சம் பேர் எழுதுகிறார்கள். இவர்களில் நாம் எப்படி எழுதி வெற்றி பெற முடியும் என்கிற பயம் பலருக்கு இருக்கும். எத்தனை லட்சம் பேர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தாலும், கடினமாக உழைக்கக் கூடியவர்கள் அதில் 10 % பேர்தான்.
👉தன்னம்பிக்கை கொண்டு படிப்பதுதான் போட்டித் தேர்வுக்கான ஆரோக்கிய படிப்பாகும். சில போட்டித் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் இவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இருக்கும்.
👉நான்கில் ஏதாவது ஒன்றில் நமக்கு குறைந்த அளவே தெரிந்திருக்கும்.
👉 இதற்கு நீங்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் போதே அதிக அளவு ஈடுபாடு எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.
👉எதை படிக்கலாம்..? எவ்வளவு நேரம் படிக்கலாம்...?
👉போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளோ, மெட்டீரியல்களோ வெறும் வழிகாட்டியே தவிர, கேள்வி & பதில்களை அடிக்கடி நீங்களே தயாரித்து அதற்கான மாதிரி தேர்வுகளை நீங்களே எழுதிப் பார்க்கலாம்.
👉சராசரியாக ஒரு நாளைக்கு முழு மனதோடு ஆறு மணி நேரம் படித்தாலே போதும். சராசரி மதிப்பெண் பெற்ற மாணவன் என்னால் வெற்றி பெற முடியுமா என நிறைய பேர் கேட்கிறார்கள். பள்ளி, கல்லூரியில் எடுத்திருக்கும் மதிப்பெண்னை வைத்து போட்டித் தேர்வுகளை மதிப்பிட வேண்டாம். தங்க மெடல் பெற்றவர்கள் கூட 10 முறை போட்டித் தேர்வுகளில் முயற்சித்தும் தோல்வியடைந்தவர்கள் நிறைய பேர் உண்டு.
👉பொருளாதார சூழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியை தடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம்
👉 தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 👍💐
🌞 சூர்யா கோச்சிங் சென்டர், மதுரை. 8124602428. 🌞👍

No comments:
Post a Comment
Please Comment