யோகா தரும் பலன்களை அறிந்து கொள்வோமா !! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

யோகா தரும் பலன்களை அறிந்து கொள்வோமா !!

யோகா தரும் பலன்களை அறிந்து கொள்வோமா !! 

பல நாட்களாக யோகா செய்ய திட்டமிட்டு செய்யாமல் இருப்பவராயின், யோகா தரும் பலன்களை அறிந்து கொண்டு இனியும் தாமதிக்காமல் முடிவெடுங்கள்…. 


1. எப்போதும் மனது சரியில்லை எனக் கூறுபவர்கள், யோகா செய்வதன்மூலம் ஒரு தீர்வு காணலாம். நம் மூளையில் gamma-aminobutyric acid (GABA) எனும் ரசாயனம் யோகா செய்யும் போது அதிகரிக்கிறது. இதனாலேயே நமக்கு மன அழுத்தம் குறைகிறது. 

2. உடல்சார்ந்த வீரராகவோ, படிப்பில் சுட்டி, எழுத்தாளன் என உளவியல் சார்ந்த நிபுணராகவோ இருந்தால் யோகா உங்களை இன்னும் மேம்படுத்தும். உங்கள் உடல் வலுவை அதிகரித்து, மனதிடத்தை உருவாக்கி, மனதை ஒருநிலைப்படுத்தி உங்களை உங்கள் துறையில் மென்மேலும் சாதிக்க வைப்பது யோகா. 

3. இரவில் பதற்றத்துடன் எழுவது, கனவுகளால் ஏற்படும் தொந்தரவுகள் என அனைத்திற்கும் யோகா ஒரு தீர்வு. 


4. யோகா என்பது யார் வேண்டுமானாலும் செய்யக் கூடிய அளவு எளிமையானது. வயது, எடை, உயரம், பாலினம் என எதையும் பார்க்காமல் யோகா செய்யலாம். ஒருமுறை முறையாக எப்படி யோகா செய்ய வேண்டும் என்பதை படித்தால் மட்டும் போதும். 

5. இறுக்கமாக இருக்கும் நம் உடலை யோகா நெகிழ்விக்கும். நம்மால் எவ்வித பிரச்னையும் இன்றி எந்த வேலையையும் செய்ய முடியும். நாம் பார்த்திருப்போமே, பல குழந்தைகள் ரப்பர் போல தங்கள் உடலை வளைப்பதை… இப்படி வளைக்கும் தன்மை நம் ஒவ்வொருவர் உடலிலும் இருக்கிறது. நாம் அதை வெளிக்கொணர பயிற்சி மட்டும் செய்தால் போதுமானது.. 

6. நம்மால் மூச்சுப் பிடித்து ஒற்றைக்காலில் நிற்க முடியும் எனத் தெரிந்து விட்டால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியும், கர்வமும் அதனால் ஏற்படும் தைரியமும் விலைமதிக்க முடியாதவை. ஆதலால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தைரியத்தை வெளிக்கொணர, யோகா செய்தாலே போதும். 


7. யோகா ஒரு சிறந்த வலி நிவாரணி. ஆம், தலைவலி, மூட்டுவலி, இடுப்புவலி என ஒவ்வொரு வலிக்கும் ஒவ்வொரு யோகா உள்ளது. மருந்து மாத்திரையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு ஏற்படும் பக்கவிளைவுகளும் ஏராளம். யோகா செய்வதன்மூலம் எவ்வித பக்கவிளைவும் இன்றி வலியில் இருந்து விடுபடலாம். 

8. ஒருமுறை பழகி விட்டோம் என்றால், நம்மால் யோகா செய்யாமல் இருக்க முடியாது. ஆம், நாம் யோகாவிற்கு அடிமையாகி விடுவோம். உண்ணல், உறங்கல்போல யோகாவும் நம் அன்றாட செயலாக மாறிவிடும்.

No comments:

Post a Comment

Please Comment