தூக்கத்தை வரவழைக்கும் உணவுகள்
தூக்கத்தை வரவழைக்கும் உணவுகள்
தூக்கமின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவையும் தூக்க சுழற்சி முறையை சிதைக்கக்கூடியவை. சிலவகை இயற்கை உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை. அவை குறித்து பார்ப்போம்.
தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது. அவை நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். மேலும் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும்.
தண்ணீரை எந்த நேரத்தில் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் தெரியுமா?!!
தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள், வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு சமிக்ஞை கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும்.
சாமந்தி டீ பருகுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.
தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது. வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.
இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது. ஓட்ஸ் உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும். அதில் மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி6 சத்தும் நிறைந் திருக்கிறது.
Foods That Sleep Sleep
There are many reasons for the problem of insomnia. Stress, depression, and digestive problems can also disrupt the sleep cycle. Some natural foods have a sedative effect. Let us look at them.
Studies have shown that eating a little almond before bedtime or during the day can improve sleep. There is a lot of sleep hormone, melatonin, and the sleep-promoting mineral magnesium. They can lead to longer and deeper sleep. It also enhances the activity of tryptophan amino acid which has soothing effects on the brain and nerves. Because of this, sleep can be avoided.
People who suffer from insomnia can also eat bananas. Tryptophan is rich in amino acid. It can signal the brain and create chemicals that trigger sleep.
Drinking marigold tea can also help you sleep better. Abigenin, an antioxidant in it, stimulates the functions of the nerve that goes into the brain and causes deep sleep.
Milk is also promoting sleep. Simply mixing milk with a little turmeric and saffron will help you sleep better. Tryptophan is rich in amino acid. Walking and yoga poses can help you sleep better without any hindrance.
It is better to eat less at night. Eating oatmeal can improve health and induce deep sleep. It is rich in vitamin B6 supplements that reduce stress.
No comments:
Post a Comment
Please Comment