தினம் ஒரு தகவல் ‘ஸ்மார்ட்’ கட்டிடங்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தினம் ஒரு தகவல் ‘ஸ்மார்ட்’ கட்டிடங்கள்

தினம் ஒரு தகவல் ‘ஸ்மார்ட்’ கட்டிடங்கள் 

கட்டிடங்கள் என்பது சிமெண்டும், மண்ணும் சேர்ந்த கலவை அல்ல. கட்டிடங்கள் முழுமை பெற ‘கட்டிட மேலாண்மை பணிகள்’ அவசியம். இதை பி.எம்.எஸ். என சுருக்கமாக அழைப்பார்கள். பி.எம்.எஸ். சேவையை பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.





கரோனா போரில் முன்நிற்கும் வீராங்கனைகள்





ஒரு பெரிய கட்டிடத்தை முழுமையாக கண்காணிக்கும் வகையிலான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிடுவார்கள். உதாரணமாக 12 அடுக்கு மாடி கொண்ட ஒரு வியாபார தலம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 



அந்த கட்டிடம் முழுமைக்கும் கண்காணிக்கும் கேமரா, தீ தடுக்கும் வகையிலான தண்ணீர் குழாய் அமைப்பு, திருட்டை தடுக்க ஒலிப்பான் போன்ற பல வகையான சேவைகளை ஒருங்கிணைத்து செய்து கொடுப்பார்கள். இருபதாம் நூற்றாண்டில் தான் இந்த சேவை வழக்கத்துக்கு வந்தது. ஐரோப்பிய நாடுகளில் பரவலாக இந்த முறை பின்பற்றப்படுகிறது. அரபு நாடுகளிலும் இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. 

பல நிறுவனங்கள் இந்த சேவையை உலக அளவில் வழங்கி வருகின்றன. பொது பயன்பாட்டு தலங்களான ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்கள் பெரும்பாலும் இந்த முறையை பின்பற்றிதான் கட்டப்படுகின்றன. 

 சரி பி.எம்.எஸ். எல்லா கட்டிடத்துக்கும் அவசியமா, என்று ஒரு கேள்வி வருகிறது. நாம் வாழ சிறியதாக வீடு கட்டிக்கொள்கிறோம். அதற்கு பி.எம்.எஸ் அவசியமா, எனக் கேட்டால் சிறிய வீட்டுக்கான கட்டிட மேலாண்மை என்பது சிறிய அளவிலானது. 

அதற்காக தனியான நிறுவனங்கள் தேவை இல்லை. உங்கள் வீட்டுக்கான கண்காணிப்பு கேமரா, தீ தடுப்பானை கட்டிட பணியாளர்களை கொண்டே பொருத்திக்கொள்ள முடியும். ஆனால் பெரிய கட்டிடங்களுக்கு, இதற்கான தனி சேவை தேவைப்படும். 

 ஐ.எம்.ஆர்.பி. என்ற வியாபார ஆராய்ச்சி நிறுவனம் இந்திய அளவில் நடத்திய கணக்கெடுப்பின்படி இந்திய கட்டிடங்கள் ‘ஸ்மார்ட் பில்டிங்’குகளாக ஆக இன்னும் முதலீடு தேவை என தெரியவந்துள்ளது. 



இந்திய கட்டிடங்கள் பி.எம்.எஸ். முறைப்படி ஸ்மார்ட் ஆக வேண்டியது அவசியம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ‘ஸ்மார்ட் பில்டிங்’ என்பதற்கு, மின்சாரம், கட்டிடத்தின் வெப்பம், குளுமை, தகவல் தொடர்பு, கண்காணிப்பு உள்ளிட்ட 15 விதமான அம்சங்களை முன்னிறுத்துகிறது. 

இந்த அடிப்படையிலேயே ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த மாதிரியாக கட்டிடங்கள் ஸ்மார்ட் ஆக மாறினால் விபத்துகள், ஆபத்துகளிலிருந்து கட்டிடங்கள் மட்டுமல்ல, மக்களும் தப்பிக்கலாம்.

Smart Buildings

Buildings are not a mixture of cement and soil. Building management functions are essential for buildings to be complete. This is done by BMS. Briefly called. BMS. The service is offered by several companies. They will have all the amenities needed to fully monitor a large building. 

For example, let's say you have a 12-storey business. They will integrate a variety of services, such as a camera to monitor the building, a fire-resistant water pipe system, and a sound system to prevent theft. The service became common in the twentieth century. This method is widely adopted in European countries. This pattern is also practiced in Arab countries. Many companies offer this service worldwide. 


Public utilities, such as railway stations, airports, and hospitals, often follow this method. OK BMS. One question is whether all buildings are necessary. We build small houses to live. Asking if BMS is necessary, building management for a small home is small. There is no need for separate companies. The surveillance camera for your home can be fitted with fire extinguishers. But for larger buildings, this will require a separate service. 

IMRB According to a survey conducted by the Business Research Institute of India, Indian buildings need more investment to become a smart building business. Indian Buildings The report suggests that it is important to be smart. 

The smart building model offers 15 types of features including electricity, building heat, cooling, communication and monitoring. The research was carried out on this basis. If buildings become smart in this way, not only buildings but also people can escape accidents and hazards.


No comments:

Post a Comment

Please Comment