பூமியிலிருந்து 640 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இரும்பு மழை பெய்யும் கிரகம் கண்டுபிடிப்பு !!
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் ஒரு பயங்கர சூடான ராட்சத கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அங்கு உருகிய இரும்பு மழை பெய்யலாம் என சந்தேகிக்கின்றனர்.
இது வானியலாளர்கள் தகவல் படி பூமியில் இருந்து 640 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது எக்ஸோபிளானட் WASP-76b எனப்படுகிறது. இதன் வெப்பநிலை 2400 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும். இது உலோகங்களை ஆவியாக்கும் அளவுக்கு உயர்ந்த வெப்பநிலை கொண்டது ஆகும்.
இந்த கிரகம் பூமி சூரியனிடம் இருந்து பெருவதை விட அதனை உருவாக்கிய நட்சத்திரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மடங்கு அதிக கதிர்வீச்சைப் பெறுகிறது. இந்த கிரகத்தில் ஒரு பக்கம் மிகவும் சூடாக இருப்பதால் மூலக்கூறுகள் அணுக்களாக பிரிக்கப்படுகின்றன,
மேலும் இரும்பு போன்ற உலோகங்கள் வளிமண்டலத்தில் ஆவியாகின்றன இது இரும்பு நீராவியை தீவிர வெப்பமான பகல் பக்கத்திலிருந்து குளிரான இரவு பக்கத்திற்கு கொண்டு வருகிறது. இந்த எக்ஸோபிளேனட்டின் இருண்ட பக்கத்தில் இரும்பு மழை பெய்வதாக ஜெனீவா பல்கலைக்கழகத்தின் இணை v டேவிட் எரென்ரிச் கூறியுள்ளார்.
Iron discovery of the Earth 640 light-years away from Earth
Astronomers from the University of Geneva in Switzerland have discovered a terrific hot giant. They suspect there may be molten iron rains. It is about 640 light-years away from Earth, according to astronomers' information. This is called Exoplanet WASP-76b. Its temperature is above 2400 degrees Celsius. It is high enough to evaporate metals.
The planet receives thousands of times more radiation from the star that created it than the Earth's sun. Because one side of the planet is so hot, molecules are broken down into atoms, and metals like iron evaporate into the atmosphere, bringing the iron vapor from the ultra-hot daylight to the cold night side. David Ehrenreich, associate professor at the University of Geneva, has said that the dark side of the exoplanet is raining.
No comments:
Post a Comment
Please Comment